தாயக, இலங்கைச் செய்திகள்

பக்கம் 1, மொத்தம் 1,333 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

18. 05. 2013: யாழ்.பல்கலைக்கழத்திலிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேறினார்கள்! பெருமளவான இராணுவம் குவிப்பு !

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் அஞ்சலி நிகழ்வுகளை நடாத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேறிச் சென்றுள்ளனர். முள்ளிவாய்க்காலில் பலியானவர்களுக்கு நேற்று யாழ்.பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் அஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டது. இதனால் அச்சமடைந்த விடுதிகளில் தங்கியிருந்த சிங்கள மாணவ மாணவிகள் விடுதிகளிலிருந்து நேற்று வெளியேறி தமது வீடுகளுக்கு சென்றுள்ளனர். கடந்த முறை மாவீர் தினத்தை பல்கலைக்கழக மாணவர்கள் அனுசரித்தபோது ஏற்பட்ட தொடர் அடக்கு முறைகளினால் இந்த முறை மாணவர்கள் எந்தவிதமான அஞ்சலி நிகழ்வுகளிலும் ஈடுபட ...

18. 05. 2013: பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் -பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் எனக் கோரி, புலிகளின் ஆதரவாளர்களான 7 பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டேவிட் கெமரனுக்கு மகஜர்களை அனுப்பியுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. இந்த மகஜர்களுக்கு இதுவரை பிரதமர் பதிலளிக்கவில்லை.

18. 05. 2013: இந்தியா, இலங்கைக்கு எச்சரிக்கை?

இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பின் முன்னணி ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தில் உயர் பாதுகாப்பு பலயம் என்ற போர்வையில் படையினர் காணிகளை அபகரித்து செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  

18. 05. 2013: புலிகளை நினைவு கூர்ந்து பொது நிகழ்வுகளை நடத்துவதோ தண்டனைக்குரிய குற்றம்!- இராணுவம்

இறுதி யுத்தத்தில் இறந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை நினைவு கூர்ந்து பொது நிகழ்வுகளை நடத்துவதோ அனுஷ்டிப்பதோ தண்டனைக்குரிய குற்றமாகும். ஏனெனில் புலிகள் இயக்கம் இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் ஆகும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

18. 05. 2013: தமிழ் மொழியூடாக பௌத்த மதத்தை தெளிவுபடுத்த வேண்டும்!- பாதுகாப்புச் செயலாளர்

தமிழ் மொழியின் ஊடாக பௌத்த மதத்தை தெளிவுபடுத்த வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

18. 05. 2013: முனனாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இருவா் கொழும்பில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து குறித்து சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

17. 05. 2013: கிளிநொச்சியில் சுமார் 6170 விதவைகள் வாழ்கின்றனர்- கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரத்து 170 இற்கும் அதிகமான பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

17. 05. 2013: 58 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

58 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளாகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுகளிலிருந்து குறித்த புகலிடக் கோரிக்கையாளாகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

17. 05. 2013: கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினால் இன்னொரு முள்ளிவாய்க்கால்

2009ஆம் ஆண்டு மே மாதம் வரையில் இலங்கையின் வடக்கில் முள்ளிவாய்க்கால்வரை கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களை நினைவுகூர்ந்தால் இன்னொரு முள்ளிவாய்க்கால் வழங்கப்படும் என்று இலங்கை அரசின் புலனாய்வுத்துறையினர் வன்னியில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

17. 05. 2013: சீன நீர்மூழ்கிகளை முறியடிக்க அரக்கோணத்தில் அதிநவீன அமெரிக்கப் போர் விமானம்

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன நீர்மூழ்கிகளின் ஊடுருவல்கள் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்முறை ஆற்றலைக் கொண்ட நெடுந்தொலைவுக் கடல்சார் கண்காணிப்பு போர் விமானத்தை தமிழ்நாட்டின் அரக்கோணம் கடற்படைத் தளத்தில் இந்தியா நிறுத்தியுள்ளது.
பக்கம் 1, மொத்தம் 1,333 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2013 நெருடல். All rights reserved.