தாயக, இலங்கைச் செய்திகள்

பக்கம் 20, மொத்தம் 1,693 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1819202122...304050...இறுதிப்பக்கம் »

15. 03. 2016: விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் அடையாளம் காணப்பட்டார்

யாழ் உரும்பிராயை பூர்வீகமாகக் கொண்ட தங்கையா பாக்கியம் தம்பதிகள் விடுதலை புலிகள் அமைப்பை ஆரம்பகாலம் தொடக்கம் ஆதரித்து விடுதலை போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்தவர்கள் இதன் காரணமாக தங்கையா அவர்கள் இந்திய இராணுவ காலப்பகுதியில் சுட்டுகொலை செய்யப்பட்டார்.

14. 03. 2016: சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்- ஜோன் கெரிக்கு அமெரிக்க வெளிவிவகாரக் குழு கடிதம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவும், அரசியல் கைதிகளை விடுவிக்கவும், இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்கவும், சிறிலங்கா அரசாங்கத்துக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுவின் தலைவர் எட்வேர்ட் ரொய்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

14. 03. 2016: அனைத்து மின்சார நிலையங்களும் சிறிலங்கா இராணுவத்திடம் ஒப்படைப்பு – மைத்திரி அவசர உத்தரவு

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மின்சார உற்பத்தி நிலையங்கள் மற்றும் உபமின் நிலையங்களில் சிறிலங்கா இராணுவத்தினரை நிறுத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று உத்தரவிட்டுள்ளார்.

14. 03. 2016: எமது இளைஞர் யுவதிகள் சுய தொழில் சார்ந்த துறைகளை தெரிவு செய்ய வேண்டும்!- சீ.வி.விக்னேஸ்வரன்.

எமது இளைஞர் யுவதிகள் அரச வேலைகளை மட்டும் எதிர்பார்த்திருக்காது தமது கற்றல் நடவடிக்கைகளைத் தொழில் சார்ந்த துறைகளில் மேற்கொள்வதன் மூலம் சிறந்த உற்பத்தியாளர்களாகவும், பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையை அடையக்கூடிய விதத்திலும் தம்மை மாற்றிக் கொள்ளலாம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

14. 03. 2016: ஜெனீவாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றுவரும் நீதிக்கான ஐ.நா நோக்கிய பேரணி

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி வேண்டி இன்று முருகதாசன் திடலில் பெருந்திரளான மக்களின் பங்களிப்போடு உணர்வுபூர்வமாக பேரணி நடைபெற்று வருகிறது.

14. 03. 2016: ஜேர்மனியில் எழுச்சிகரமாக நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தினம்!

அனைத்துலக பெண்கள் தின நிகழ்வு நேற்றைய தினம் ஜேர்மனியின் டுசுல்டோர்வ் நகரில் எழுச்சிகரமாக நடைபெற்றது. இதில் பெண்கள் அமைப்பினர் கறுப்பு உடையணிந்து கலந்துகொண்டுடிருந்தனர்.

14. 03. 2016: காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

திருகோணமலை, வரோதய நகரில் அமைந்துள்ள அம்மன் கோவில் மலைப்பகுதியில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

13. 03. 2016: இந்திய மீனவர்கள் 23 பேர் கைது!

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, 23 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.

13. 03. 2016: புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் துபாயில் முதலீடு

விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு, பின்னர் காணாமல் போனதாக கூறப்படும் தங்கத்தை தேடி பாரிய நிதி மோசடி குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு இவ்வாரம் துபாய் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

12. 03. 2016: காணாமல் போனோர் தொடர்பில் மீண்டும் விசாரணை

காணாமல் போனோர் தொடர்பில் மேலும் மூன்று மாவட்டங்களுக்கான வாய்மூல சாட்சி விசாரணைகளை மேற்கொள்வதற்கு காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பக்கம் 20, மொத்தம் 1,693 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1819202122...304050...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.