தாயக, இலங்கைச் செய்திகள்

பக்கம் 4, மொத்தம் 1,693 பக்கங்கள்« முதல்பக்கம்...23456...102030...இறுதிப்பக்கம் »

13. 07. 2016: பொறுப்புக்கூறல் விடயத்தில் உடன்படிக்கைபடி இலங்கை செயற்படவேண்டும்:ஐக்கிய நாடுகள் சபை!

பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேசத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கைபடி இலங்கை செயற்படவேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

13. 07. 2016: மனித உரிமைகள் தொடர்பில் தீர்மானம் எட்டப்படுமா? நிஷாவுடன் கலந்துரையாடல்

இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் நிஷாபிஷ்வால் மற்றும் உதவிச் செயலாளர்டொம் மெலினாவ்ஸ்கி ஆகியோருடன் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்

13. 07. 2016: நல்லாட்சி அரசாங்கத்தையும் மீறியா இவைகள் நடக்கின்றன

திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் பூர்வீகமாக வாழும் நிலாவெளி வீதி, சாம்பல் தீவு சந்தியில், பொலிஸ் பாதுகாப்புடன் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமையை, மூதூர் இந்து குருமார் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

13. 07. 2016: ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் இலங்கை சிறைக்கு மாற்றம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை பெற்று தமிழகம் வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தன் என்ற சுந்தரராஜாவை இலங்கை சிறைக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

09. 07. 2016: ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளருக்கு எதிராக வழக்கு?

ஐக்கிய நடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னுக்கு எதிராக வழக்குத் தொடர இலலங்கைப் புத்திஜீவிகள் சிலர் ஆயத்தமாகி வருகின்றனர்.

07. 07. 2016: கந்தக காற்றின் தாக்கத்தால் இன்றும் முல்லை மக்கள் பாதிக்கப்படுகின்றனர் – சிறிதரன்

யுத்த காலத்தில் பாவிக்கப்பட்ட கொத்துக் குண்டின் விளைவுகள் வன்னிப் பிராந்திய மக்கள் மத்தியில் தற்போது கூட தாக்கத்தை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

07. 07. 2016: வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து அவரது தனிப்பட்ட கருத்தே என்றும், அது சிறிலங்கா அரசாங்கத்தின் இறுதியான நிலைப்பாடு அல்ல என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.

05. 07. 2016: யாழ் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் தினம் அனுட்டிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று தமிழீழ விடுதலை புலிகளின் கரும்புலிகள் நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

05. 07. 2016: யாழ்.பல்கலைக்கழக விடுதியில் கரும்புலிகள் தின சுவரொட்டிகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் வாயில் கதவில் கரும்புலிகள் தினத்தை நினைவுபடுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

05. 07. 2016: பிள்ளையார் ஆலயத்தை உடைத்து பௌத்த விகாரை கட்டிய இராணுவம் :சர்வதேச இந்துமத குருபீடம் கண்டனம்

இந்துக்களின் புனித பூமியாக விளங்கும் வடக்கில் இந்து ஆலயத்தை உடைத்து அழித்து பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளமையை சர்வதேச இந்து மத குருபீடத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம் என சர்வதேச இந்து மத குரு பீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தெரிவித்தார்.
பக்கம் 4, மொத்தம் 1,693 பக்கங்கள்« முதல்பக்கம்...23456...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.