தாயக, இலங்கைச் செய்திகள்

பக்கம் 5, மொத்தம் 1,693 பக்கங்கள்« முதல்பக்கம்...34567...102030...இறுதிப்பக்கம் »

03. 07. 2016: கனரக ஆயுத குவியலால் தடுமாறும் சமகால அரசாங்கம்!

இலங்கையில் நிலவிய போரின் காரணமாக நாட்டின் பாதுகாப்பு துறை அளவுக்கு அதிகமான வளர்ச்சி கண்டிருந்தது.

03. 07. 2016: இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பான எதிர்பார்ப்புக்கள்!

அனைத்துத் தரப்பினரதும் கவனமும் கடந்த வாரம் ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் 32வது கூட்டத்தொடரின் மீதே செறிந்து போயிருந்தது.

03. 07. 2016: அவலம் தீராத ஈழம்!- ஐ.நா.வும் சர்வதேசமும் தமிழர்களை ஏமாற்றி விட்டன!- சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன், கடந்த வாரம் தமிழகம் சென்றிருந்தார்.

01. 07. 2016: அமெரிக்காவின் கண்காணிப்பு பட்டியலில் இலங்கை!

வெளிநாடுகளுக்கு மனித கடத்தலை மேற்கொள்ளும் நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி 30.06.16 வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

01. 07. 2016: மன்னாரில் புலனாய்வு பிரிவினரால் கடத்தப்பட்ட குடும்பஸ்தருக்கு சித்திரவதை

மன்னார் – பள்ளிமுனை மேற்கு பிரதேசத்தில் புலனாய்வு பிரிவினரால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் 38 வயதுடைய அன்ரன் டெனி என்ற குடும்பஸ்தர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

01. 07. 2016: வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற ஐ.நா. அழுத்தம் கொடுக்க வேண்டும்! ஜெனிவாவில் வலியுறுத்திய தமிழர் தரப்பு

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு பங்குபற்றல் இருக்காது என்ற வாக்குறுதியை தமது வாக்கு வங்கியாகிய சிங்கள மக்களுக்கு தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார்கள் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

01. 07. 2016: என்னுடைய கணவரை இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன்

யுத்தத்தின்போது 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் எனது இரண்டு பிள்ளைகளுடன் உயிர் பிழைத்த நான் இன்னும் எனது கணவரை தேடிக்கொண்டிருக்கின்றேன் என்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

29. 06. 2016: இலங்கையை எச்சரியுங்கள் – ஜோன் கெரிக்கு அழுத்தம்

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்ப டுத்துவது தொடர்பாக, இலங்கை அரசாங்கத்தை அமெரிக்கா எச்சரிக்கை செய்ய வேண்டுமென, அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின்- 24 உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

29. 06. 2016: பணத்தைக்காட்டி காணிகளை பறிக்க முயலும் கடற்படை!

நாட்டின் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை பலவந்தமாக கையகப்படுத்தி வரும் ஸ்ரீலங்கா கடற்படை மற்றும் இராணுவத்தினர் தற்போது காணி உரிமையாளர்களுக்கு பணத்தாசையை காட்டி காணிகளை கையகப்படுத்தும் தந்திரமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

25. 06. 2016: சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்பு வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
பக்கம் 5, மொத்தம் 1,693 பக்கங்கள்« முதல்பக்கம்...34567...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.