உலகச் செய்திகள்

பக்கம் 2, மொத்தம் 140 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

16. 07. 2016: துருக்கி இராணுவ சதிப் புரட்சி முறியடிப்பு! – 60 பேர் பலி,754 படையினர் சரண்

துருக்கியில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட இராணுவ சதிப் புரட்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக துருக்கி உள்நாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

16. 07. 2016: துருக்கி இராணுவ புரட்சி! 42 பேர் பலி! இலங்கையர்களின் நிலை குறித்து விசாரணை

துருக்கியின் ஆட்சி அதிகாரத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ள போதிலும், அந்நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் ஜனாதிபதி டையின் எர்டோகன் அறிவித்துள்ளார்.

15. 07. 2016: ஒன்றரை ஆண்டில் 230 பேர் பலி.. நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு பிரான்ஸ்சில் பெருகியுள்ள தீவிரவாதம்

ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸில்தான் கடந்த ஓராண்டாக தீவிரவாத தாக்குதல் மிதமிஞ்சிய அளவுக்கு பெருகியுள்ளது. கடந்த வருடம், செப்டம்பரில், சார்லி ஹெப்டோ என்ற பத்திரிகை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு பல்வேறு அசம்பாவிதங்களை அந்த நாடு சந்தித்து வருகிறது.

15. 07. 2016: உலகையே திரும்பி பார்க்க வைத்த 4 வயது குழந்தை

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் சண்டையிட்டு வருகின்றது. இதில் தீவிரவாதிகளின் வசமுள்ள நகரங்களை மீட்பதற்கு ஈராக் ராணுவத்திற்கு பல நாடுகள் உதவியும் புரிந்து வருகிறது. இந்த சண்டையில் இரு தரப்பினருக்கும் இழப்பு ஏற்பட்டாலும், பொதுமக்கள் தான் அதிக அளிவில் பாதிக்கப்படுகிறார்கள்,

15. 07. 2016: பிரான்சில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்- 80 பேர் பலி!! அவசரநிலைப் பிரகடனம்! இலங்கையர்கள் பாதிக்கப்படவில்லை..

பிரான்சில் Bastille Day கொண்டாட்டத்தின் போது இடம்பெற்ற விபத்தில் சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

13. 07. 2016: இத்தாலியில் புகையிரதம் நேருக்கு நேர் மோதி விபத்து!!! இலங்கையருக்கு பாதிப்பு இல்லை.

தெற்கு இத்தாலியின் புக்லியா பிரதேசத்தில் இரண்டு பயணிகள் புகையிரதம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதுள்ளது.கோராடோ மற்றும் ஆண்டிரியா நகரங்களுக்கு இடையிலான ஒரு வழி புகையிரத பாதையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

07. 07. 2016: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது ஏன்?

உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் வார்த்தை `பிரெக்ஸிட்'. ஐரோப்பிய யூனியனின் மிக வலுவான பிரிட்டன் அதில் இருந்து விலக வேண்டும் என்னும் முடிவை மக்களே எடுத்திருப்பது பொருளாதார முன்னேற்றத்தைப் பாதிக்கும் என்கிற அச்சத்தை விதைத்திருக்கிறது.

07. 07. 2016: மத்தியதரைக்கடலில் இருந்து 4500 குடியேற்றவாசிகள் மீட்பு

இறப்பர் படகுகளின் உதவியுடன் மத்தியதரைக்கடலில் பயணித்து வந்த சுமார் 4500 குடியேற்றவாசிகள் நேற்று இத்தாலிய கடலோர காவற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

03. 07. 2016: ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளின் வதிவிட நிலை தொடர்பான உத்தரவாதம்

ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் ஸ்கொட்லாந்தில் வாழும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளின் வதிவிட நிலை தொடர்பான உத்தரவாதம் குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.

03. 07. 2016: உலகிலே பிரம்மாண்ட தொலைநோக்கியை பொருத்தும் பணியை சீனா முடித்தது

சீனாவின் தென் மேற்கு மாகாணமான குவிஷொவில் உள்ள மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத கிண்ணத்தின் ( டிஷ்) நடுப்பகுதியில் இறுதிப் பாகம் பொருத்தப்பட்டது.
பக்கம் 2, மொத்தம் 140 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.