விபச்சாரம் செய்து கைதாகியுள்ள கன்னட நடிகை யமுனா, எந்த ஒரு வாடிக்கையாளரையும், ஒரு தடவைக்கு மேல் `அனுமதிக்க` மாட்டார் என்று காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் பெங்களூர் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஐடி நிறுவன அதிபர் ஒருவருடன் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது கையும் களவுமாக பிடிபட்டார் நடிகை யமுனா. இவர் கன்னடப் படங்களில் குணச்சித்திர நடிகையாக இப்போது நடித்து வருபவர்.
தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான கே.பாக்யராஜ், முதன் முதலாக மலையாள படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.
பாக்யராஜ் படம் என்றாலே தமிழ் சினிமா மட்டுமல்ல, கேரளாவிலும் இவருக்கு ரொம்ப மவுசு. அதுமட்டுமல்ல திரைக்கதை அமைப்பதில் இந்தியளவில் தலைசிறந்தவர் என்று பெயர் பெற்றவர்.
சினிமா தொழிலாளர்களுக்கும் எட்டு மணி நேர வேலை அமைய வேண்டும் என்று வி.சி.குகநாதன் வலியுறுத்தியுள்ளார்.
கலைஞரின் கதை வசனத்தில் அவரது 75வது படமான "இளைஞன்" படம் பொங்கல் முதல் திரையரங்குளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்தின் நாயகனாக பாடல் ஆசிரியர் பா.விஜய் நடித்து இருந்தார். சுரேஷ் கிருஷ்ணா டைரக்ட் செய்திருந்தார்.
வடிவேலு 25 வித்யாசமான ரோல்களில் நடிக்கும் புதியபடம் "உலகம்". இப்படத்தை புதுமுக இயக்குநர் ஆதம் பாவா என்பவர் இயக்குகிறார். ஒரு வருடத்திற்கு முன்பே இப்படத்தின் தலைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. படத்தை பா.ம.கா.வை கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் தயாரிக்கிறார்.
உள்ளாடை அணியாமல் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றதாக நடிகை நீது சந்திரா எதிராக மகளிர் அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. மாதவனுடன் யாவரும் நலம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நீது சந்திரா. மும்பையை சேர்ந்த இவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
டைரக்டர் சற்குணத்தின் படத்தில் இருந்து நடிகை அமலா பால் நீக்கப்பட்டுள்ளார். களவாணி என்ற வெற்றப்படத்தை இயக்கிய டைரக்டர் சற்குணம், அடுத்து இயக்கவிருந்த புதிய படத்தின் நாயகியாக நடிகை அமலா பால் ஒப்பந்தமானார். நாயகனாக களவாணி நாயகன் விமலே நடிக்கிறார்.
"வானம்" பட சூட்டிங்கின் போது நடிகர் சிம்புவுக்கு காலில் அடிபட்டதால் அவருக்கு ஆபரேஷன் நடைபெற இருக்கிறது.
இந்த ஆண்டு கைநிறைய படங்கள் வைத்துள்ள சிம்பு தற்போது வானம் படத்தில் நடித்து வருகிறார். இந்தபடத்தை காதலர் தினம் அன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.
நடிகர் மன்சூர் அலிகான் நடிக்கும் புதிய படத்திற்கு கடன் வாங்கி கல்யாணம் என்று பெயரிட்டுள்ளனர். ஒரு காலத்தில் தியேட்டரையே அதிர வைக்கும் அளவுக்கு மிரட்டலுடன் வில்லனாக நடித்து வந்த நடிகர் மன்சூர் அலிகான், சமீப காலமாக நகைச்சுவை வேடங்களில் அதிக அக்கறை காட்டுகிறார்.
வெயில் படம் மூலம் வெற்றி இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான டைரக்டர் வசந்தபாலன், அங்காடித் தெரு மூலம் வெற்றியை தக்க வைத்துக் கொண்டவர். அவர் அடுத்து இயக்கி வரும் புதிய படம் அரவான்.
'கோ' படத்தின் கதை எனது சொந்த அனுபவங்களை அடிப்படையாக கொண்டது என்று இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறினார். ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் குமார், ஜெயராமன், ஜெயந்த் தயாரிக்கும் படம் 'கோ'. ஜீவா, கார்த்திகா, அஜ்மல், பியா நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.