நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்த் சினிமாவுக்கு முழுக்கு போட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதைத் தொடர்ந்து அரசியலில் முழு கவனம் செலுத்துவதற்காக சினிமாவுக்கு முழுக்கு போட்டிருக்கிறார்.
நடிகர் சிவா மீதான சித்ரவதை வழக்கை அவரது மனைவி வாபஸ் பெற்றார். ஈரமான ரோஜாவே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகர் சிவா. இவரது மனைவி மீனாட்சி, கடந்த 18ம்தேதி சென்னை வடபழனி மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் அழகர் சாமியின் குதிரை. வெண்ணிலா கபடிக்குழு மூலம் இயக்குனராக அறிமுகமான சுசீந்திரன், நான் மகான் அல்ல படத்தைத் தொடர்ந்து அழகர் சாமியின் குதிரை படத்தை இயக்கி வருகிறார்.
பருத்தி கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம். இரட்டை வேடத்தில் என்றாலும் ஒற்றை கார்த்திக்குத்தான் தமன்னா ஜோடி என்பது ஆறுதல். (இல்லையென்றால் அந்த கார்த்திக்கும் அவரது ஜோடிக்கும் நாலு டூயட்... இந்த கார்த்திக்கும் இவரது ஜோடிக்கும் நாலு டூயட் என்று மொத்த படத்தையம் முடித்திருப்பார்களே... அந்த வகையில் தப்பித்தோம் என்பதைத்தான் ஆறுதல் என்று சொல்கிறோம்)!
சாமியாருடன் சல்லாபித்த வீடியோ வெளியானதால் சர்ச்சைக்குள்ளான நாயகியாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த ரஞ்சிதமான அந்த நடிகை, சமீபத்தில் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு குடியேறியிருக்கிறார்.
900 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இளையராஜா, சில திரைப்படங்களைத் தயாரித்தும் இருக்கிறார். தற்போது 'செங்காத்து பூமியிலே' படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கி,முதன் முறையாக திரைப்பட வினியோகஸ்தர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் விஜய் கலந்து கொள்வாரா? முன்னாள் முதல்வர் ஜெ.விடம் இது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, “இந்த கேள்வியை நீங்க அவரிடம்தான் கேட்கணும்” என்றார் ஜெ. கடந்த வாரமே ஜெயலலிதாவை சந்திக்கப் போகிறார் விஜய் என்று பரபரப்பு கிளம்பிய நிலையில் இந்த பதில் ஏராளமான அர்த்தங்களை உள்ளடக்கியது என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்!
தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை கருவாக வைத்து புதிய படத்துக்கான கதையை உருவாக்கியிருக்கிறார் மணிரத்னம். இந்த படத்தை மணிரத்னம் தயாரிக்க, அவரது அசிஸ்டென்ட் சிவா இயக்க உள்ளார்.
கலைப்புலிதாணுவின் தயாரிப்பில் சீமான் இயக்கி விஜய் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டாலும் அது உறுதியில்லாமல் இருந்தது. காரணம்,ஆளும்கட்சிக்கு எதிராக இருக்கிறார் சீமான் அவர் இயக்கத்தில் நீ நடித்தால் அது நமக்குச் சிக்கல் என்று சொல்லிக்கொண்டிருந்தாராம் எஸ்.ஏ.சந்திரசேகர்.இது சீமான் சிறைக்குப் போவதற்கு முன்பு நடந்தது கதை.