தமிழர் பண்பாட்டு நடுவம் ஒருங்கிணைப்பு செய்த மே-18 நாளில் இன அழிப்பு நாள் நினைவேந்தல் கூட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.
பிரான்சின் பல முன்னணி ஆசிரியர்கள் மற்றும் நடனத்துறைசார் மாணவர்களை பங்கெடுத்திருந்த இப்பெரும் பரத நிகழ்வினை தமிழர் புனர்வாழ்வுக்கழகம்- பிரான்சு 13வது தடவையாக நடாத்தியிருந்தது.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பு நாளான மே-18ம் நாளான தமிழீழத் தேசியக் துக்க நாளன்று உலகத் தமிழர்களின் முரசறைவாக அமையவுள்ள தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கம் தொடர்பிலான சிறப்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது.தமிழீழ சுதந்திர சாசன வரைபுக்கான விளக்ககையேடுகள் மற்றும் மக்கள் கருத்தறியும் கேள்விக்கொத்துக்கள் விநியோகிக்கப்பட்டிருந்தன.
...
1988 ம் ஆண்டு சித்திரை மாதம் 19ம் நாள் உலக வரலாற்றில் ஒரு தமிழ் தாய் நான்காவது வல்லரசு நாட்டுக்கு எதிராக உண்ணா நோண்பிருந்து சாவைத்தழுவிக்கொண்டார்.
ஈழத் தமிழ் மக்களின் சுதந்திரத்துக்காக நீதி வேண்டிய தாய்த் தமிழக மாணவர் சமூகம் முன்னெடுக்கும் ஜனநாயக வழியிலான போராட்டங்களுக்கு ஆதரவாகவும் நோர்வே வாழ் இளையோர் நேற்றும் இன்றும் கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்தியுள்ளனர்.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் சாத்வீக முறையிலான போராட்டங்களை மேற்கொண்டுவரும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியத் தலைநகர் லண்டனில் மூன்று ஈழத் தமிழ் இளைஞர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று பி.ப 2:00 மணிமுதல் மத்திய லண்டன் பகுதியில் உள்ள இந்திய உயர்ஸ்தானியர் அலுவலகம் (INDIAN EMBASSY) முன்பாக மூன்று தமிழ் இளைஞர்களும் சர்வதேச மட்டத்தில் கவனயீர்ப்பை ஏற்படுத்தும் முகமாகவும், தமிழக மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாகவும் இப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
எந்த அமைப்புக்களின் பின்புலமும் இன்றி இளைஞர்கள் தாமாகவே முன்வந்து இப்போராட்டத்தை முன்னெடுத்திருப்பது ...
பிரான்சில் நடைபெற்ற மாவீரர்நாள் 27.11.2012
பிரித்தானியத் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள “முருகதாசன் நினைவுத்திடலில்” 1நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
23 .09 .2012 அன்று தமிழர் நடுவம் டென்மார்க்கினால் பில்லுண்ட் நகரத்தில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றது.
ஞாயிறு மலை 4.30 மணியளவில் பொதுசுடர் ஏற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் தேசியகொடி கொடிப்பாடலுடன் ஏற்றப்பட்டது. அகவணக்கத்தினை தொடர்ந்து பொது மாவீரர்கள், தியாகதீபம் லெப். கேணல் திலீபன், கேணல் சங்கர், மேஜர் சிட்டு, தியாகி தங்கவேல் விஜயராஜ் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து நிகழ்வில் கலந்து ...
தியக தீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் 25 ஆம் ஆண்டை முன்னிட்டு நினைவு வணக்க நிகழ்வு லண்டனில் நடைபெற்றது.1987 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15 ஆம் திகதி லெப்ரினன் கேணல் திலீபன், ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்து 12 நாட்களாக அவர் நடாத்திய தியாகப் பயணத்தின் மூன்றாம் நாளான நேற்று அவருக்கான வணக்க நிகழ்வுகள் லண்டன் ஈஸ்ட்காம் பகுதியில் உள்ள ட்றினிட்றி சென்ரரில் நடைபெற்றது.
தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வணக்க நிகழ்வு ...