பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் இறுதிச் சடங்களை கலந்து கொள்ள சென்ற தன்னை கொழும்பு விமானநிலையத்தில் தடுத்தி மீண்டும் திருப்பி அனுப்பிய இலங்கையைக் கண்டித்து, சென்னையில் அந்நாட்டு தூதரகத்தை முற்றுகையிட்ட திருமாவளவன் கைது செய்யப்பட்டார்.
தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரனின் தாயார் வே. பார்வதி அம்மாக்கு நேற்று மாலை நாம் தமிழர் சார்பாக
சென்னையில் அமைதி பேரணி நடை பெற்றது. இது நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்த வீரத்தாய் பார்வதியம்மாள் அவர்களுக்கு பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புலவர் மகிபை பாவிசைக்கோ அவர்கள் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினார். நிகழ்ச்சிக்கு பெங்க்ளூர் தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளர் தாமோதரன் தலைமை வகித்தார்.
......அவர்கள் செல்லவிருந்த பஸ் வண்டியும் திருப்பி அனுப்பபட்டது பல்கலை வாசல் எங்கிலும் போலிஸ் மயம். மாணவர்கள் கொந்தளித்தபடி உள்ளனர். பயச் சூழல் காணப்படுகிறது
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாளின் மரணச் சடங்குக்கு யாழ்.பல்கலைக்கழகத்தில் இருந்து இன்று புறப்பட்டு செல்ல இருந்த பல நூற்றுக்கணக்கான பட்டதாரி மாணவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் காலையில் ஈடுபட்டு உள்ளனர்.
அரசபாளையத்தில் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் அன்னை பார்வதியம்மாள் அவர்களின் நினைவேந்தல் அணிவகுப்பு 21.02.2011 திங்கள் மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
20.02.2011 அன்று மாலை சுமார் 6 மணி அளவில் தமிழீழத்தின் தாய்க்கு தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி போறுப்பாளர்கள், மற்றும் புரட்சிகர அமைப்பின் தோழர்கள், தமிழ் பற்றாளர்கள், தமிழீழ ஆதரவாளர்கள், அண்ணன் பிரபாகரனின் அன்பு தம்பிகள் அனைவரும் கலந்து கொண்டு மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
மதிமுக பொது செயலாளர் வை.கோ, ஈழத்தின் பேரன்னை பார்வதி அம்மையாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் அமைதி பேரணிகளும், இரங்கல் பொதுக்கூட்டங்களும் நடத்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும், கிராமங்களிலும் பார்வதி அம்மையாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது.
தலைவர் வே.பிரபாகரன் அவர்களது தயார் அன்னை வேலுப்பிள்ளை பார்வதிஅம்மா அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20-02-2011) அன்று எம்மை விட்டுப் பிரிந்துள்ளார். அவரது பிரிவுச் செய்தி உலகத் தமிழ் மக்களை ஆறாத் துயரில் ஆழ்தியுள்ளது. அன்னையின் பிரிவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.
கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சியின் நகர தலைமை அலுவலகத்தில் 20-02-2011 அன்று மாலை 6 மணி அளவில் தேசியத்தாய் பார்வதி அம்மாள் அவர்களுடைய நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது . இந்த நினைவேந்தல் நிகழ்விற்கு நகர அமைப்பாளர்களில் ஒருவரான பிரதீப் தலைமையேற்றார்.
தியாகச் சுடர்களான முத்துக்குமார், முருகதாசன் உட்பட்ட 19 தியாக சீலர்களினதும் இரண்டாம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு லண்டனில் நேற்று இடம்பெற்றது.