புகைப்படங்கள்

பக்கம் 10, மொத்தம் 41 பக்கங்கள்« முதல்பக்கம்...89101112...203040...இறுதிப்பக்கம் »

03. 07. 2011: யேர்மன் தலைநகரத்தில் சிறீலங்கா தூதரகத்தின் சதி முயற்சி பெர்லின் வாழ் ஈழத்தமிழ் மக்களால் முறியடிப்பு !!!

தமிழர் தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பு இன்று சர்வதேச கவனம் பெற்றுள்ளதுடன் அதனை தழுவியே இன்றைய சர்வதேச செயற்பாடுகள் தவிர்க்கமுடியாது நகர்ந்து வருகையில் சிங்களத்தின் மீதான சர்வதேச அழுத்தங்கள் முன்னிலும் பலமாகப் பிரயோகிக்கப் பட்டு வருகின்ற வேளையில் யேர்மன் தலைநகர் பெர்லினில் அமைந்திருக்கும் சிறீலங்கா தூதரகம் இன்று யேர்மன் வெளிவிவகார அமைச்சின் ஆதரவுடன் ஒழுங்குசெய்யப்பட்ட "அனைத்து இனத்தவர்களின் விழா " என்னும் நிகழ்வை திசை திருப்பி தமக்கு மேலாக வலுப்பெறும் சர்வதேச விமர்சனங்களை முறியடிக்கும் முகமாக ஒரு சில ஈழத்தமிழர் என்றே கூற முடியாத விலைபோன துரோக கும்பல்களை இணைத்து பொய்ப் பிரச்சார நிகழ்வை நடாத்தினார்கள்.

29. 06. 2011: சிறீலங்கா கிறிக்கெட்டைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் – குழப்பம் விளைவிக்க முயன்ற சிங்களவர்கள்

தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசாங்கத்தின் கிறிக்கெட் அணியைப் புறக்கணிக்குமாறு கோரி பிரித்தானிய தமிழ் இளையோர் நேற்று (28-06-2011) லண்டன் ஓவல் மைதானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

27. 06. 2011: (காணோளியும் இணைப்பு) பிரித்தானியாவில் இருந்து தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புவதற்கு எதிராக தமிழர்கள் நடாத்திய ஆர்ப்பாட்டம்

அகதிகளாக தஞ்சம்கோரிய தமிழ் மக்களை நாடுகடத்த வேண்டாம் என கோரி, பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரித்தானியப் பிரதமரின் காரியாலயத்திற்கு முன்னால் நேற்று மாலை 4:30 மணி முதல் 7:30 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

27. 06. 2011: யேர்மனியின் தென்மேற்கு மாநிலத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள்

யேர்மனியின் தென்மேற்கு மாநிலத்திற்காக மாவீரர் விளையாட்டுப் போட்டிகள் நேற்று 25.6.2011 இடம் பெற்றது இப்போட்டிகளில் தென்மேற்கு மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களின் மாணவர்கள் பொற்றேர்கள் ஆசிரியர்கள் பங்குபற்றினர்.

27. 06. 2011: மெரினா கடற்கரை மெழுகுவர்த்தி அணிவகுப்பு – 50000 மக்களுக்கு மேல் கலந்து கொண்டுள்ளனர்

சென்னையில் இன்று மாலை மெரினா கடற்கரை மெழுகுவர்த்தி சுடர் ஏற்றும் நிகழ்வு நடை பெற்று கொண்டு இருக்கிறது. இதில் பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஈழத்தில் இறுதிப் போரில் இறந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.

24. 06. 2011: தமிழர்களை திருப்பி அனுப்பாதே!!! சுவிஸ் அரசிடம் தமிழர்களிடம் பெறப்பட்ட கையெழுத்துக்கள் ஒப்படைக்கப்பட்டது

நேற்று 23.06.2011 வியாழக்கிழகை காலை 9.30 மணிக்கு பேர்ன் பாராளுமன்றத்திடம் இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்பாதே என்று தமிழர்கள் மத்தியில் சேர்க்கப்பட்ட 4844 கையெழுத்துக்கள் ஒப்படைக்கப்பட்டது.

24. 06. 2011: யேர்மன் Essen நகரத்தில் பல்லின மக்களுடன் ஈழத் தமிழ் மக்களும்

யேர்மன் Essen நகரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காட்டுமிராண்டிதனமான முதலாளித்துவத்துக்கு எதிரான பல்லின மக்களின் நிகழ்வில் ஈழத்தமிழ் மக்களும் கலந்துகொண்டனர் இவ் நிகழ்வில் காட்டுமிராண்டிதனமான முதலாளித்துவத்தினால் பல்வேறு நாடுகளில் போர் மற்றும் இனப்பிரச்சனை உருவாகின்றது என்ற அடிப்படையில் பல்வேறு இனத்தவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

21. 06. 2011: பிரான்சில் அகதி தஞ்சம்கோரும் தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்!

பிரான்சில் அகதி தஞ்சம்கோரும் தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிறன்னு (யூன்19) சிறப்பாக இடம்பெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவாகார அமைச்சகம், இந்த கலந்தாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

20. 06. 2011: ஜக்கியராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினாரால் நேற்று (19.06.2011) நடாத்தப்பட்ட இளந்தளிர் நிகழ்வு

ஜக்கியராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினாரால் நேற்று(19.06.2011) இளந்தளிர் நிகழ்வு நான்காவது தடவையாக “இளந்தளிர் 2011” எனும் பெயரில் மண்டபவம் நிறைந்த மக்களுடன் மேற்கொள்ளப்பட்டது. மாலை 4 மணி தொடக்கம் “ஈழத்தமிழரின் அடையாளம்” கண்காட்சி மக்கள் பார்வையிற்காக வைக்கப்பட்டிருந்தது.

10. 04. 2011: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் திருகோணமலையில் பதவியேற்பு

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு,கிழக்கு பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று காலை திருகோணமலையில் நடைபெற்றது.
பக்கம் 10, மொத்தம் 41 பக்கங்கள்« முதல்பக்கம்...89101112...203040...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.