புகைப்படங்கள்

பக்கம் 11, மொத்தம் 38 பக்கங்கள்« முதல்பக்கம்...910111213...2030...இறுதிப்பக்கம் »

08. 02. 2011: பிரான்ஸ்: ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் நடைபெற்ற பொங்கல் விழா. பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்பு

பிரான்சின் கிழக்குப் பாகத்திலிருக்கும் ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் 06.02.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று பொங்கல் விழா சால் து லா பூர்ஸ் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றிருந்தது. 

08. 02. 2011: யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “அழியாச்சுடர்” நினைவுநிகழ்வு

எம் விடுதலை வரலாற்றில் எம் சுதந்திர வாழ்வுக்காய் அமைதி தேடி சென்ற வேலையில் இந்திய சக்தியின் சதியால் தம் உயிரை அர்பணித்த கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின்  நினைவாகும், தமிழின் ரத்த உறவுக்காய் தணலிற்கே தம்உயிர் தந்து தமிழனின் தன்மானத்தை தரணிக்கே  நிலை நாட்டிய தியாகச்சுடர்கள் முத்துகுமார் மற்றும் முருகதாஸ் உட்பட ஏனைய வீரச் செம்மல்களின்  நினைவாகவும்,

07. 02. 2011: மட்டு. பெரியகல்லாறு ஓடையில்; பிறந்து ஒருநாளான பெண் சிசுவின் சடலம் மீட்பு!

மட்டு. களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள ஓடையில் பிறந்து ஒருநாளான பெண் சிசுவின் சடலம் ஒன்றை களுவாஞ்சிகுடி பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று காலை பெரியகல்லாறு மாதாகோவில் வீதியில் உள்ள ஓடைக்கரையில் பிறந்த பெண் சிசுவின் சடலம் ஒன்றை அப்பகுதி மக்கள் அவதானித்து களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

06. 02. 2011: இரணைமடுக்குளம் நீர்நிலை 34 அடிக்கு உயரும் அபாயம்

வன்னியில் கடும் மழை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இரணைமடுக்குளத்து நீர் 34அடிக்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது 32 அடி 6 அங்குலத்தில் தண்ணீர் உயர்ந்துள்ளது. மாங்குளம் கனகராயன்குளம் போன்ற குளங்களின் நீர் கனகராயன் ஆற்றினால் வருவதைத் தொடர்ந்து நீர்நிலை அதிகரித்து வருவதாக கிளிநொச்சி இரணைமடு நீர்பாசன திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

06. 02. 2011: (காணொளி) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை பலப்படுத்த தயாராகும் தமிழகம்

  தமிழகத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தோழமை மையம் ஏற்பாடு செய்திருந்த "நாடுகடந்த தமிழீழ அரசு ஏன்" எனும் தலைப்பிலான கருத்தரங்கம் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. பெப்ரவரி 4 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

05. 02. 2011: பிரான்சில் சிறீலங்கா சுதந்திர தினப்புறக்கணிப்பு – சிறீலங்காவை புறக்கணிப்போம்

பிரான்சில்  சிறீலங்காவின் சுதந்திரதினத்தை  புறக்கணிப்பும், போர்க்குற்றநாடான சிறீலங்காவை அரசசபைகளில் இருந்து நீக்கவும், தமிழரின் தாயகம் தமிழீழம் என்பதை வலியுறுத்தியும் பாரிசின் மிகவும் பிரபல்யம் வாய்ந்த இடமான Place du Paraguay என்னும் இடத்தில் 4ம் திகதி பி.பகல் 15.00 மணிக்கு நடைபெற்றது.

05. 02. 2011: (ஒலி வடிவம் இணைப்பு) எம் இனத் துயர் நீக்குவோம் வாரீர்….

நமது தேசம் சிறீலங்கா இனவெறி அரசின் கொடூரத்தால் துயர்  சூழ்ந்து  நிற்கின்றது. அவர்கள் பொழிந்த நச்சு குண்டுகளால் எமது மக்களின் உயிர்கள் உடைமைகள் அழிக்கப்பட்டு பிறந்த மண்ணிலேயே அகதியாக முட்கம்பி வேலிக்குள்ளும் தகர குடிசைக்குள்ளும் வாழவேண்டிய  துர்ப்பாக்கிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. வீடிழந்து  வாழ்விழந்து அங்கமிழந்து  துயர்சுழியில் சிக்கி துயரத்தின் விரிவின் உச்சியிலே வாழும் எம் மக்களை இயற்கை அனர்த்தமும் அழிப்பதாகவே உள்ளது.

05. 02. 2011: மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டடு உதவி வழங்கினார் வன்னி எம்.பி வினோ

மன்னார் மாவட்டம் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளம் கிராமத்தில் வெள்ள நீர் உற்புகுந்துள்ளமையினால் தற்போதுவரை 44 குடும்பங்களைச்சேர்ந்த 130 பேர்வரை பாதிக்கப்பட்டு   இடம் பெயர்ந்நிலையில் பாடசாலையிலும் ஆலையத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

02. 02. 2011: நாடுகடந்த தமிழீழ அரசின் “தமிழீழ தேசிய அட்டை” அறிமுக விழாவும், முத்துக்குமாரின் 2-ம் ஆண்டு நினைவு நிகழ்வும்

நாடுகடந்த தமிழீழ அரசின் தேசிய அட்டை அறிமுக விழாவும், முதல்கட்ட விநியோகமும் நாடுகடந்த தமிழீழ அரசினால் பிரித்தானியாவில் நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தியாகப் பேரொளி முத்துக்குமாரன் நினைவு வணக்கமும் இடம்பெற்றது. கடந்த சனிக்கிழ்மை 29-01-2011 அன்று மாலை 7 மணிக்கு லண்டன் பிறண்ட் ஹோலில் நடைபெற்ற இந்த வரலாற்று சிறப்பு நிகழ்வில் பிறண்ட் நகரசபை உறுப்பினர் உட்பட தமிழ்  அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் என பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

30. 01. 2011: யோர்க் பல்கலைக்கழக தமிழீழ மாணவர்களின் பல்கலாச்சார நிகழ்வு

யோர்க் பல்கலைக்கழக மாணவர்கள் ஆண்டுதோறும் நடாத்திவரும் பல்கலாச்சார வார நிகழ்வுகளின் இந்த ஆண்டுக்கான நிகழ்வு தை மாதம் 24 ம் நாள்முதல் 28 ம் நாள்வரை பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது. இதில் 55  க்கும் மேற்பட்ட நாடுகளின் மாணவர் அமைப்புகள் கலந்துகொண்டு தமது நாடுகளின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை வெளிப்படுத்தினர்.
பக்கம் 11, மொத்தம் 38 பக்கங்கள்« முதல்பக்கம்...910111213...2030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.