யாழ்.மாவட்டத் தேர்தல் தொகுதியில் யாழ்ப்பாணத்தில் 13 பிரதேசசபைகள் 3 நகரசபைக்கான வேட்புமனுத் தாக்கலின்போது 16 வேட்புப் பத்திரங்களின்படி 63 வேட்புப்பத்திரங்கள் கிடைக்கப்பெற்று அவற்றில் 20 நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் சுயேட்சைக்குழு உள்ளிட்ட 20 வேட்புமனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
'தமிழ் மக்களாகிய நீங்கள் தாங்கமுடியாத துயரங்களைக் கடந்து கனடா வந்துள்ளதை நான் நன்கறிவேன். இயற்கை எழில் கொண்ட அழகான நாடான சிறிலங்காவில் இன்றும் கொடூரமான செயல்களே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. கனடியத் தமிழர் பேரவை சக்தி வாய்ந்த தலைமைத்துவத்தைக் கொண்ட உறுதியான அமைப்பு. தமிழ் சமூகத்துக்காக சனநாயக ரீதியில் குரல் கொடுத்து வரும் கனடிய தமிழர் பேரவையின் சேவையினை நான் மெச்சுகிறேன்.
தமிழக மீனவர் திரு.ஜெயக்குமார் அவர்களை கடந்த 23-1-2011 அன்று இனவெறி பிடித்த சிங்கள கடற்படையினர் கழுத்தை கயிறால் இறுக்கி மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
வீரத்தமிழன் முத்துக்குமார் இனவெழுச்சி சுடர் ஊர்திப்பயணம் இன்று காலை முத்துக்குமரனின் சொந்த ஊரான தூத்துக்குடி கொழுவைநல்லூரில் தமிழக இளைஞர் எழுச்சிப்பாசறை தோழர்கள் அருண்சோரி, இரணியன் தலைமையில் தொடங்கியது,
22 ஜனவரி 2011 சனிக்கிழமை பிற்பகல் பிரான்ஸ் தமிழீழ மக்களவை ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு, தமிழ் மக்கள்மீது இனப்படுகொலை புரிந்த சிங்கள அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஷேவையும், அவரது சகாக்களையும் அமெரிக்க அரசு கைது செய்து, அவர்மீதான போர்க் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டும் என்ற கொட்டொலிகளை முழங்கினார்கள்.
பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்னால் தமிழர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
தற்சமயம் அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள மகிந்த ராஜபக்ஷவை கைதுசெய்து விசாரிக்கவேணும் என தமிழர்கள் கோரியுள்ளனர்.
புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகம், தாங்கள் ஒரு இறைமையுள்ள தேசிய இனம் என குறியீட்டுரீதியாக அடையாளப்படுத்தும், தமிழீழத் தேசிய அட்டையை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வழங்கி வருகின்றது.
தமிழர் திருநாளாகிய பொங்கல் திருநாள் முதல் இந்த அட்டைகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பில் நேற்று காலை கனமழை பொழிந்துள்ள போதும் மாலையில் இருந்து மழை சற்று ஓய்ந்துள்ளது. ஆனால் வாவியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் வாவியை அண்மித்த மக்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனர்.
மழை, பனி, கடும் குளிர் என பிரஞ்சு மக்களையே வீட்டினுள் முடங்க வைக்கும் கால நிலையிலும் தமிழர்கள் தம் தேசத்தின் கடமைக்காகத் தெருவில் இறங்கிப் போராடும் வலிமை குறைந்து போய்விடவில்லை.