பிரான்சு நாட்டு மக்களுக்கு முக்கியமாக கருதப்படும் புனிதர் அனைவரின் பெருவிழா நாளில் பிரான்சில் தமிழ்மக்கள் அதிகமாக வாழ்கின்ற இடங்களில் ஒன்றான லாக்கூர்னோவ் என்னும் இடத்தில் தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு சிலை வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
''ஒன்றாய் எழுவோம்!'' என்ற தொனிப் பொருளில், புலம்பெயர் தமிழ் மக்களின் ஒன்றிணைந்த போராட்டத்தை வலியுறுத்தி பாரிஸ் நகரில் நடைபெற்ற மக்கள் எழுச்சி மாநாடு வெற்றிகரமாக முடிந்துள்ளது.
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன், முதல் பெண்மாவீரரான 2-ம் லெப்ரினன் மாலதி உட்பட இம்மாதங்களில் வீரச்சாவை தழுவிய அனைத்து மாவீரர்களையும் நினைவுகூரும் எழுச்சிவணக்க நிகழ்வு நேற்று பிரித்தானியாவில் இடம்பெற்றது.
பிரான்சில் மாவீரர்களான லெப் கேணல். நாதன், கப்ரன் கஐன் ஆகியோரின் 14 வது ஆண்டு நினைவுகூரல் பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான Aubervillers அமைந்துள்ள துயிலும் இல்லத்தில் நினைவு கூரப்பட்டது.
யேர்மனியில் எம் உறவுகளுக்காக கரம் கொடுக்கும் விளையாட்டு நிகழ்வு 24 .10 .2010 அன்று பெர்லின் தமிழர் விளையாட்டு கழகத்தினால் தமிழ் ஈழத்தில் அழிவின் விளிம்பில் நின்று தவிக்கும் எம் உறவுக்களுக்கு கரம் கொடுக்கும் முகமா உதைப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வு நடைபெற்றது.
சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஐரோப்பா ரீதியாக நடாத்தப்படும் அக்கினித்தாண்டவம் மேற்கத்தேய நடனப்போட்டி நிகழ்வு ஆறாவது தடவையாக கடந்த 23.10.2010 சனிக்கிழமையன்று Fribourg, Düdingen, Hotel Bahnhof மண்டபத்தில் நடைபெற்றது.
இறுதி யுத்தத்தின் போது சிங்களப் படைகளுடன் போரிட்டு வீரகாவியமான போராளிகளினதும் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டு ராணுவத்தினரால் கொல்லப்பட்ட போராளிகளை நிவானப் படுத்தி சிங்கள ராணுவத்தினர் மகிழ்வடைவதை புகைப்படமூடாக காணக்கூடியதாகவுள்ளது.
திருமலை மாவட்டத்தில் சோழர் காலத்து தமிழ் எழுத்துக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக திருமலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:
திருமலை மாவட்டத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தொன்மையான தமிழ் எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டுக்கள் நிலத்துக்கடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
லண்டனிலிருந்து சிவந்தன் எனப்படும் இளைஞனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மனிதநேயப் பயணம் ஜெனிவாவை சென்றடைய, அங்கிருந்து Brüssel, ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி திருமதி தேவகி குமார், திரு ஜெகன், திரு வினோத் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
சாட்சிகள் அற்ற போர் என்ற அமைப்பு சில புதியபடங்களை வெளியிட்டுள்ளது. அதில் ஆனந்தபுரச் சமரில் இறந்த பெண்போராளிகள் உட்பட பலரது உடல்கள் நிர்வாணமான நிலையில் போடப்பட்டுள்ளது தெளிவாகக் காண்பிக்கப்படுகிறது.
போரில் இறந்த போராளிகளின் சீருடைகள களைந்து அவர்களை அவமானப்படுத்தும் இலங்கை அரச இராணுவத்தினர் போர்குற்றங்கள் புரிந்திருக்கின்றமை இப் புகைப்படத்தில் நன்கு தெரிவதோடு, இறந்த சில போராளிகளை அடையாளம் காணக்கூடியதாக உள்ளதாகவும் தெரியவருகின்றது.