புகைப்படங்கள்

பக்கம் 19, மொத்தம் 38 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1718192021...30...இறுதிப்பக்கம் »

01. 09. 2010: என்னை படிக்க வையுங்கள், அண்ணாமாரை கண்டுபிடியுங்கள்! வன்னிப் போரில் காலை இழந்த சிறுமி உருக்கம்

நெருடல் வாசகர்களுக்கு, இந்த சிறுமிக்கு தேவையான அனைத்தையும் செய்வதாக புலம்பெயர் தமிழீழத்தில் இருந்து ஒருவர் (அவரின் பாதுகாப்பு கருதி பெயர் வெளியிடப்படவில்லை) பொறுப்பெடுத்துள்ளார்.   இந்த சிறுமியை போலவே இன்னும் எத்தனையோ சிறுவர்கள் சிதறடிக்கப்பட்டுளார்கள், அவர்கள் அனைவரையும் நெருடல் விரைவில் புலம்பெயர் தமிழீழத்திற்க்கு எடுத்து வரும்.   இந்த சிறுமிக்கு வழங்கிய ஆதரவை போலவே உங்கள் அனைவரின் ஆதரவும் எம் மக்களுக்கு இருக்கும் என்று நம்புகின்றோம்.   நன்றி நெருடல் குழுமம் "என்னைப் படிக்க வையுங்கள். எனது அண்ணாமாரை கண்டு பிடித்து தாருங்கள்." இப்படி உருக்கமாக இறைஞ்சுகின்றார் கிளிநொச்சி மாவட்டத்தின் புதுமுறிப்புக் கிராமத்தைச் சேர்ந்த சுகிர்தா ஸ்ரீஸ்கந்தராஜா என்கிற சிறுமி. வயது 14.

01. 09. 2010: மீள்குடியேற்றத்திற்கென அழைத்துச்செல்லப்பட்ட விசுவமடுப் பிரதேசமக்கள் தெருவில் விடப்பட்டுள்ளனர்!

மீள்குடியேற்றம் என்ற பெயரில் முகாம்களில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட ஆயிரத்து இருநூற்று பதினைந்து மக்கள் விசுமடுப் பகுதியில் மூன்று மாதகாலமாக எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

01. 09. 2010: வன்னி மக்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றமையை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது கூட்டமைப்பு!

வன்னியில் இருந்து மக்களின் சொத்துக்கள் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதை ஆதாரப்படுத்துவதுடன், இந் நடவடிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக் கண்டிக்கின்றது. இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வன்னிமக்கள் போரால் பேரவலத்தில் இருந்து இன்னமும் மீளாத நிலையில் அந்த மக்கள் முழுமையாக மீள்குடியமர்த்தப்படவில்லை இந் நிலையில் அவர்களின் சொத்துக்கள் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுகின்றமையை தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் ஆதாரத்துடன் வெளிப்படுத்துகின்றோம்.

29. 08. 2010: ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி ஜெனீவாவிலிருந்து மூன்று ஈழ உணர்வாளர்களின் மனிதநேய நடைபயணம்.

சுவிஸ் ஜெனீவாவிலுள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலிலிருந்து மூன்று தமிழீழ உணர்வாளர்கள் தன்னெழுச்சியாக முன்வந்து புருசல்ஸிலுள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் நோக்கி மனிதநேய நடைபயணமொன்றை இன்று ஆரம்பித்துள்ளனர்.

29. 08. 2010: மலைப்பாம்புகளை பிடிப்பதற்காக உயிரை பணயம்வைக்கும் ஆபிரிக்க பழங்குடிகள்

ஆபிரிக்காவின் தென் பகுதியில் காணப்படும் அதிபயங்கர மலைப்பாம்புகளை எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் வேட்டையாடும் மனிதர்களை பார்க்கும் பொது நமக்குள் பயம் தொற்றிகொள்ளும் என்பது உண்மையே.

21. 08. 2010: சிவனந்தனின் நடைப்பயணத்தின் இறுதிநாள் நிகழ்வு

சிவனந்தனின் நடைப்பயணத்தின் இறுதிநாள் நிகழ்வு

16. 08. 2010: டென்மார்க்கில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா 2010

டென்மார்க்கில் தமிழர் விளையாட்டு விழா சனிக்கிழமை (13.08.2010) ஓகூஸ் நகரில் பெருந்திரளான மக்களுடன் சிறப்பாக நடைபெற்றது.எமது பாரம்பரிய விளையாட்டுகளான கிளித்தட்டு, கயிறிழுத்தல், அஞ்சலோட்டம், உதைபந்தாட்டம் போன்ற விளையாட்டுகள் இடம் பெற்றிருந்தன.

16. 08. 2010: சுவிசில் செஞ்சோலை மாணவியரின் அஞ்சலி

2006 ஆகஸ்ட் 14 இல், சிறி லங்கா விமானப் படையின் குண்டு வீச்சில் செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட அப்பாவி மாணவிகளை நினைவு கூரும் நிகழ்வு பேரண் தமிழர் இல்லத்தில் ஞாயிறு மாலை நடைபெற்றது.

15. 08. 2010: சிவனந்தனுக்கு வலுசேர்க்க சுவிசில் இருந்து மூவர் நடைப்பயணம்

சிவந்தனின் கோரிக்கைகளுக்கு வலுசேர்க்கும் முகமாக சுவிஸ் சூரிச்சிலிருந்து மூவர் ஐக்கிய நாடுகள் சபையை நோக்கி தமது நடைப்பயணத்தை தொடங்கியுள்ளனர்.

15. 08. 2010: 14-08-2010 அன்று பிரான்சில் நடைபெற்ற செஞ்சோலைப் படுகொலை நினைவு

சிறிலங்கா பேரினவாத அரசின் கொலை வெறித்தாண்டவத்தின் விமானக் குண்டுவீச்சுத்தாக்குதலில் பலியான வள்ளிபுனம் செஞ்சோலை பள்ளிச் சிறார்களின் 4 ஆம் ஆண்டு நினைவு சுமந்த அஞ்சலி நிகழ்வு 14-08-2010 அன்று பிரான்ஸ் ரொக்கத்தோப் பகுதியில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது.
பக்கம் 19, மொத்தம் 38 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1718192021...30...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.