புகைப்படங்கள்

பக்கம் 2, மொத்தம் 41 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

21. 03. 2013: நோர்வே வாழ் தமிழ் இளையோர்கள் நடாத்தும் கவனயீர்ப்புப் போராட்டம்.

ஈழத் தமிழ் மக்களின் சுதந்திரத்துக்காக நீதி வேண்டிய தாய்த் தமிழக மாணவர் சமூகம் முன்னெடுக்கும் ஜனநாயக வழியிலான போராட்டங்களுக்கு ஆதரவாகவும்  நோர்வே வாழ் இளையோர் நேற்றும் இன்றும் கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்தியுள்ளனர்.

19. 03. 2013: தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவிலும் போராட்டம் ஆரம்பம்.!! 3 தமிழ் இளைஞர்கள் உண்ணாவிரதம்!

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் சாத்வீக முறையிலான போராட்டங்களை மேற்கொண்டுவரும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியத் தலைநகர் லண்டனில் மூன்று ஈழத் தமிழ் இளைஞர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று பி.ப 2:00 மணிமுதல் மத்திய லண்டன் பகுதியில் உள்ள இந்திய உயர்ஸ்தானியர் அலுவலகம் (INDIAN EMBASSY) முன்பாக மூன்று தமிழ் இளைஞர்களும் சர்வதேச மட்டத்தில் கவனயீர்ப்பை ஏற்படுத்தும் முகமாகவும், தமிழக மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாகவும் இப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். எந்த அமைப்புக்களின் பின்புலமும் இன்றி இளைஞர்கள் தாமாகவே முன்வந்து இப்போராட்டத்தை முன்னெடுத்திருப்பது ...

18. 12. 2012: பிரான்சில் நடைபெற்ற மாவீரர்நாள் 27.11.2012

பிரான்சில் நடைபெற்ற மாவீரர்நாள் 27.11.2012

27. 11. 2012: முருகதாசன் நினைவுத்திடலில் திரண்ட பல்லாயிரம் மக்கள்! 27.11.2012

பிரித்தானியத் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள “முருகதாசன் நினைவுத்திடலில்” 1நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

24. 09. 2012: தியாக தீபம் திலீபன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு நாள் – டென்மார்க்

23 .09 .2012 அன்று தமிழர் நடுவம் டென்மார்க்கினால் பில்லுண்ட் நகரத்தில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றது. ஞாயிறு மலை 4.30 மணியளவில் பொதுசுடர் ஏற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் தேசியகொடி கொடிப்பாடலுடன் ஏற்றப்பட்டது. அகவணக்கத்தினை தொடர்ந்து பொது மாவீரர்கள், தியாகதீபம் லெப். கேணல் திலீபன், கேணல் சங்கர், மேஜர் சிட்டு, தியாகி தங்கவேல் விஜயராஜ் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டது. தொடர்ந்து நிகழ்வில் கலந்து ...

18. 09. 2012: லண்டனில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!

தியக தீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் 25 ஆம் ஆண்டை முன்னிட்டு நினைவு வணக்க நிகழ்வு லண்டனில் நடைபெற்றது.1987 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15 ஆம் திகதி லெப்ரினன் கேணல் திலீபன், ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்து 12 நாட்களாக அவர் நடாத்திய தியாகப் பயணத்தின் மூன்றாம் நாளான நேற்று அவருக்கான வணக்க நிகழ்வுகள் லண்டன் ஈஸ்ட்காம் பகுதியில் உள்ள ட்றினிட்றி சென்ரரில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வணக்க நிகழ்வு ...

11. 06. 2012: தமிழீழ மாணவர் எழுச்சிநாள் – நோர்வே

தமிழீழ மாணவர் எழுச்சிநாள் நோர்வே ஒஸ்லோ நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக தமிழ் இளையோர் நடுவத்தினரால் 10 /06/2012 அன்று முன்னெடுக்கப்பட்டது.

09. 06. 2012: இறுதிப்போரில் சிங்கள படைகளால் கைதாகி சித்திரவதைக்காளான போராளிகளின் படங்கள்

வன்னியில் இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளையில் அரச சிங்கள படைகளினால் கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகளின் அதிர்ச்சி படங்கள் சில கிடைக்கப்பெற்றுள்ளன. படங்கள் வருமாறு:

21. 05. 2012: ”ஐ.நா. சபையே தமிழீழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்து!”

இனப்படுகொலையை மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம்! ஐ.நா. சபையே தமிழீழத்தில் பொது வாக்கெடுப்ப நடத்து!” சென்னை மெரினா கடற்கரையில் மே 20 ஞாயிறு அன்று மாலை விண்ணதிர எதிரொலித்த முழக்கங்கள் இவை.

26. 04. 2012: கனடியப் பாராளுமன்றத்தில் சிறி லங்காவின் கொலைக்களம் 2′ திரையிடப்பட்டது.

சிறி லங்கா ஈழத் தமிழர் மீது மே 2009 நடத்திய படுகொலைகளின் 3ஆம் ஆண்டு நிறைவில் கனடியப் பாராளுமன்றத்தில் ஊடகவியலாளர் சந்திப்புடன் சனல் 4 ஆவணக் காணொளி 'சிறி லங்காவின் கொலைக்களம் 2' திரையிடப்பட்டது.
பக்கம் 2, மொத்தம் 41 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.