புகைப்படங்கள்

பக்கம் 20, மொத்தம் 38 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1819202122...30...இறுதிப்பக்கம் »

08. 08. 2010: அவுஸ்திரேலிய தமிழர் புனர்வாழ்வுக் கழகமும், செஞ்சிலுவைச்சங்கத்தின் இரத்த வங்கியும் இணைந்து நடாத்திய குருதிக் கொடை நிகழ்வு – 2010

இலங்கையில் 1983ம் ஆண்டு, அந்த கறுப்பு ஜுலை மாதத்தில் நடைபெற்ற இனக் கலவரத்தில் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட, தமிழின மக்களின் அவலநிலையை நினைவூட்டும் முகமாகவும், தமிழர் மாத்திரமன்றி உலகின் ஏனைய இன மக்களும் அறியவேண்டும் என்ற நோக்கத்துடன் அவுஸ்திரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரதி ஆண்டுதோறும் ஜூலை மாதத்தை, துயர்துடைப்பு மாதமாக அனுஷ்டித்து வருகிறது.

04. 08. 2010: கனடாவில் நடைபெற்ற தமிழீழச் சுற்றுக்கிண்ணம் – துடுப்பாட்டம் 2010

கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியத்தின் விளையாட்டுத் துறை பிரிவு மார்க்கம் ரொறன்ரோ துடுப்பாட்ட அமைப்புடன் இணைந்து நடத்திய இரண்டாவது தமிழீழத் துடுப்பாட்டச் சுற்றுக் கிண்ணம் யூலை 31 ஆம்; மற்றும் ஆகஸ்ட் 1 ஆம் நாட்கள் ஸ்காபுரோவில் அமைந்துள்ள Goldhawk மற்றும் Muirlands பூங்காகளில் சிறப்புற நடைபெற்றது.

28. 07. 2010: ரொரன்ரோவில் பல்லாயிரத்தில் மக்கள் கலந்து கொண்ட கறுப்பு யூலை ஒன்றுகூடல்

ஞாயிற்றுக்கிழமை, யூலை 25ஆம் நாள் மாலை 6 மணிக்கு ரொரன்ரோ பாராளுமன்றம் Queen’s Park முன்றலில் கனடியத் தமிழர்கள் நடாத்திய பாரிய கறுப்பு யூலை ஒன்றுகூடலில் பல்லாயிரத்தில் மக்கள் கலந்து கொண்டனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் - கனடா பிரதிநிதிகள் மற்றும் கனடியத் தமிழர் தேசிய அவை ஆகியன ஒற்றுமையை வலியுறுத்தி ஒன்றாக இந்நிகழ்வை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு பிரதிநிதிகளும் மக்கள் வாக்களிப்பின் மூலம் நேரடியாக தெரிவு செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

28. 07. 2010: தமிழ் மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும் – சிவந்தன் அழைப்பு

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடைப்பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

28. 07. 2010: லண்டனில் நடைபெற்ற இரவுநேர கவனயீர்ப்பு பேரணியும் – சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடைபயண ஆரம்பமும்.

கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் இரத்த நாட்களை நினைவுகூர்ந்து லண்டனில் நேற்றைய தினம் இரவு நேர கவனயீர்ப்பு பேரணி ஒன்று பிரித்தானியா வாழ் தமிழ் மக்களால் நடாத்டப்பட்டது.

28. 07. 2010: பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க்கில் கறுப்புயூலை கவனயீர்ப்பு நிகழ்வு.

சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மிகக் கொடுமையான இனப்படுகொலை புரிந்து 27 ஆண்டுகள். தமிழ் மக்களின் இரத்தக்கறை படிந்த பக்கங்களாக இன்னமும் வலியைத் தந்து கொண்டிருக்கும் கறுப்பு யூலை கனத்த நாட்கள் என்றும் மறக்கப்பட முடியாதவை.

28. 07. 2010: கறுப்பு யூலையை முன்னிட்டு கனடியத் தமிழ் இளையோர் முன்னெடுத்த நிகழ்வு

யூலை 1983 இன் பொழுது தமிழ் மக்கள் மீது அநியாயமாக நிகழ்த்தப்பட்ட இனக்கலவரங்கள் தமிழ் மக்களின் மனங்களை பெருமளவில் பாதித்திருக்கின்றன. தொடர்ந்து ஏழு நாட்களாக தமிழர் வாழ்ந்த பகுதிகளில் அவர்களை நிம்மதியாக வாழ முடியாதபடி இவ்வினக்கலவரங்கள் இலங்கை அரசினாலும் சிங்கள மக்களினாலும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன.

12. 07. 2010: சுவிஸில் சூறிச் மாநிலத்தில் நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த நாள் 2010

வீரத்தினதும் உயிர்ஈகத்தினதும் மனஉறுதியினதும் அதிஉயர்வடிவமாக எமது தேசியத்தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டு, உயிராயுதம் என்ற பெயர் சூட்டப்பட்டு இனங்காட்டப்பட்டவர்கள் கரும்புலிகள்.

11. 07. 2010: உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படம்

நேற்று முன்தினம் அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் ஒரு கடற்கன்னி சடுதியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த உல்லாசப் பிரயாணிகள் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியுள்ளனர்.

07. 07. 2010: ஐ.நா.அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பட தொகுப்பு!!

கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது அலுவலகத்துக்கு முன்பாக உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டவர்கள் தங்களை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தால் தம்மைத்தாமே தீ மூட்டி தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டி தமக்கு முன்னால் போத்தல் ஒன்றில் பெற்றோலும் பக்கத்தில் தீப்பெட்டியும் வைத்திருந்தனர்.
பக்கம் 20, மொத்தம் 38 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1819202122...30...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.