புகைப்படங்கள்

பக்கம் 20, மொத்தம் 41 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1819202122...3040...இறுதிப்பக்கம் »

20. 10. 2010: விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்க கையெழுத்துப் போராட்டம்

திட்டமிட்டபடி செவ்வாய்க் கிழமை இன்று மாலை நான்கு மணிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்தேறியது. பொது இடத்தில் நடத்துவதற்கான அனுமதியை காவல் துறையிடம் கேட்கப்பட்டது. அதற்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. எனவே சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடத்துவது என்று முடிவானது. அந்த இடத்திற்கும் காவல்துறையினர் வந்து தடுப்பார்களோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி ஏதும் நடக்கவில்லை.

20. 10. 2010: பீரிஸின் வருகையை எதிர்த்து இன்று இலண்டனில் ஆர்ப்பாட்டம்

லண்டனில் இன்று (19-10-2010) செவ்வாய்க் கிழமை மதியம் 12:30 மணிமுதல் மாலை 3:30 மணிவரை ஜி.எல்.பீரிஸின் வருகைகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் கலந்துகொள்ளும் மாநாட்டைக் கண்டித்தும் நூற்றுக்கணக்கான லண்டன் வாழ் தாமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

18. 10. 2010: கனடா டொரோண்டோ பல்கலைகழகத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய அடையாளங்களை முதன்மைபடுத்தும் ஆரம்ப நிகழ்வு

இந்தக் கல்வியாண்டிற்கான அங்கத்தவர் அட்டை மற்றும் மேல் ஆடை  ஆகியவற்றை வெளியிடுவதில் UTSC TSA இன்    நிர்வாக அவை மற்றும் இயக்குனர் குழுமம் ஆகியன மகிழ்வுகொள்கின்றன. தமிழ் அடையாளத்தின் அங்கங்களான தமிழ்மொழி, கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றைப் பாதுகாப்பதில் UTSC TSA நம்பிக்கை கொண்டுள்ளது.

18. 10. 2010: கறுப்பு யூலை 83 குற்றச்சாட்டு என்ற நூல் வெளியீடு கனடா முருகன் கோயில் அரங்கில் சிறப்பாக நடந்தேறியது

போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் நடத்திய வெளியீட்டு விழாவுக்கு வெலிக்கடை சிறைச்சாலையில் சிங்களக் காடையர்களால் அரங்கேற்றப்பட்ட  படுகொலையில் மயிரிடையில் உயிர்தப்பிய திரு. அன்டன் சின்னராசா பிலிப் தலைமை தாங்கினார்.

18. 10. 2010: குளிரான காலநிலையிலும் மனிதநேய நடைப்பயணம் டென்மார்க்கில் 4வது நாளாக தொடர்கின்றது

நேற்று சனிக்கிழமை Fyn தீவை நோக்கி தொடர்ந்த மனிதநேய நடைப்பயணம் மாலையில் Nørre Aaby நகரத்தை சென்றடைந்தது. நேற்று மனிதநேய நடைப்பயணத்தில் ஈடுபட்டுவரும் மனோ, தீபன் மற்றும் மகேசுடன் சேர்ந்து பயணத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. குறிப்பாக சிறுவர்கள் பலர் தமிழீழ தேசியக்கொடியையும் தாங்கி நடைப்பயணத்தில் கலந்து கொண்டனர்.

17. 10. 2010: கூட்டமைப்பின் தலைமை அலுவலகம் இன்று கொழும்பில் திறப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையக அலுவலகக் கட்டடம் இன்று காலை பம்பலப்பிட்டியில் திறந்துவைக்கப்பட விருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயங்கத் தொடங்கி பல வருடங் களான போதும் நிரந்தரக் கட்டடம் இல்லாத நிலையில் இதுவரை காலமும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களிலேயே கூட்டங்களை, சந்திப்புக்களை நடத்திவந்தது.

14. 09. 2010: தமிழ்நாட்டில் இருந்து திரும்பிய 13 தமிழ் அகதிகள் மணல்திட்டில் மீட்பு

தமிழ்நாட்டில் அடைக்கலம் தேடியிருந்த 13 ஈழத்தமிழர்கள் கடல்வழியாக தாயகம் திரும்பிய போது மணல்திட்டில் இறக்கி விடப்பட்ட நிலையில் சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

12. 09. 2010: மூன்றாவது ஐரோப்பிய நாட்டில் கால் பதிக்கும் மானிட நேய நடைப்பயணம்

பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி, சுவிஸ் ஜெனீவா ஐ..நா சபை முன்னால் ஆரம்பிக்கப்பட்ட மானிட நேய நடைப்பயணம் மூன்றாவது ஐரோப்பிய நாட்டில் கால் பதிக்கவுள்ளது. 

12. 09. 2010: யேர்மன் பெர்லினில் நடைபெற்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்த உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2010

1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள் தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் உண்ணா விரதப்போராட்டம் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில்  1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீழாத் துயரில் ஆழ்த்தினார்.

12. 09. 2010: உலகில் மிகப்பெரிய சொக்கலேட் (Chocolate)

ஆர்மேனியா நாட்டின் மிகப்பெரிய சொக்கலேட் தயாரிப்பு நிறுவனமான 'கிரான்ட் கன்டி' நிறுவனம், தனது 10ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு உலகிலேயே மிகவும் பிரமாண்டமாக சொக்கலேட்டினை தயாரித்திருக்கிறது. 4,410 கிலோகிராம் நிறையுடைய இந்த 'சொக்கலேட் பார்' ஆனாது 25 சென்ரிமீற்றர் தடிப்பம் கொண்டது. இந்த சொக்கலேட் பாரானது 5.6 மீற்றர் நீளமும் 2.75 மீற்றர் அகலமும் கொண்டது.
பக்கம் 20, மொத்தம் 41 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1819202122...3040...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.