புகைப்படங்கள்

பக்கம் 3, மொத்தம் 38 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

16. 10. 2011: லண்டனில் நடைபெற்ற இம்மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு

2ஆம்.லெப்ரினன்  மாலதி, லெப்ரினன் கேணல் விக்டர், லெப்ரினன் கேணல் குமரப்பா, லெப்ரினன் கேணல் புலேந்திரன், பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட இம்மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு லண்டனில் நடைபெற்றது.

13. 10. 2011: இம் மாதங்களில் வீரச்சாவைத் தழுவிய அனைத்து மாவீரர்களையும் நினைவு

முதற் பெண் மாவீரர் மாலதி மற்றும் விக்டர், குமரப்பா, புலேந்திரன், சுப.தமிழ்ச்செல்வன் உட்பட இம் மாதங்களில் வீரகாவியமாகிய மாவீரர்கள் நினைவு எழுச்சி வணக்க மாலை

07. 10. 2011: மாவீரர்நாள் 2011 மக்கள் நிகழ்வாக ஒழுங்கமைக்கப்படுகின்றது.

 தமிழீழ மக்களின் விடுதலைக்கான போரட்டம் சர்வதேச மட்டத்தில் - சனநாயக வழிகளில் - காத்திரமான வடிவங்களில் இடம்பெறுவதற்கான தேவையை உணர்ந்தே இந்த மாவீரர்நாள் 2011 மக்கள் நிகழ்வாக ஒழுங்கமைக்கப்படுகின்றது.

21. 09. 2011: மனித உரிமைப் போருக்கு நிதி சேர்க்க கடலெனத் திரண்டனர் கனடியத் தமிழர்; சர்வதேச மன்னிப்புச் சபைக்காக 50,000 டாலர்கள் சேகரிப்பு

கனடிய தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பெற்ற 3வது வருடாந்த நிதிசேர் நடை பவனியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான தமிழ் நெஞ்சங்களால் கடந்த 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காபரோவிலுள்ள தொம்ஸன் பூங்கா மஞ்சள் சாயத்தில் ஒளிர்ந்து காட்சியளித்தது.

31. 08. 2011: ரொறன்ரோ நகரிலுள்ள கனடியத் தமிழ்க் காங்கிரஸ் மண்டபத்தில் இடம்பெற்ற செல்வி. செங்கொடியின் வணக்க நிகழ்வு (புகைப்படங்கள்)

நாடு கடந்த அரசின் ஏற்பாட்டில் இன்று ரொறன்ரோ நகரிலுள்ள கனடியத் தமிழ்க் காங்கிரஸ் மண்டபத்தில் இடம்பெற்ற செல்வி. செங்கொடியின் வணக்க நிகழ்வின் (புகைப்படங்கள்)

31. 08. 2011: லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு முன்பாகநடைபெற்ற போராட்டம். (படங்கள் இணைப்பு)

பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு முன்பாக  கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று பிரித்தானியா வாழ் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)

04. 08. 2011: 23வது கனடியத் தமிழர் விளையாட்டுப் போட்டி

கனடியத் தமிழர் விளையாட்டுத்துறையின் 23வது வருடாந்த தடகள விளையாட்டுப் போட்டிகள் இம்முறையும் சிறப்பாக ஜூலை 30, சனிக்கிழமை, 31, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களிலும் நடைபெற்று முடிந்துள்ளன. யோர்க் பல்கலைக்கழக மைதானத்தில் சீலன், இம்ரான்-பாண்டியன், தீபன் ஆகிய மூன்று கழகங்களை உள்ளடக்கிய மும்முனைப் போட்டியாகவும், மற்றும் தனிநபர்கள் பங்குபற்றியதாகவும் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்திரளான போட்டியாளர்களும் பார்வையாளர்களும் கலந்துகொண்டனர்.

31. 07. 2011: ஒடுக்கப்படும் இனமான குர்டிஸ்தான் மக்களுக்காக யேர்மனியில் ஈழத்தமிழர்களும் இணைந்து குரல்கொடுப்பு (காணொளி, படங்கள் இணைப்பு)

பல ஆண்டு காலமாக ஒடுக்கப்பட்டு அடிமைப்படுத்தி அழிக்கப்பட்டு வரும் இனமான குர்டிஸ்தான் மக்கள் சிறப்பாக கடந்த சில மாதங்களாக ஈரான் மற்றும் துருக்கி நாட்டின் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்படுவதை கண்டித்து யேர்மனியில் நேற்று பல நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகளை நடாத்தினார்கள்.

30. 07. 2011: பிரான்சில் இடம்பெற்ற மாவீரர் லெப். கேணல் விக்ரர் நினைவு சுமந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி!

ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அனுசரணையுடன் தமிழர் விளையாட்டுத்துறை – பிரான்சு, மாவீரர் லெப். கேணல் விக்ரர் ( ஒஸ்கார் ) அவர்களின் ஞாபகார்த்த 8 வது ஆண்டு நடாத்தும் அனைத்துலக ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2011 கடந்த 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு PTE DE LA CHAPELLE Stade Porte de la Chapelle மைதானத்தில் நடைபெற்றது.

29. 07. 2011: சுவிஸில் நேற்றைய தினம் நினைவுகூரப்பட்ட கறுப்பு யூலை நிகழ்வு (புகைப்படங்களும் இணைப்பு)

சுவிஸ் ஈழத்தமிழரவை மற்றும் சுவிஸ் தமிழ் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸின் தலைநகரமான பேர்ண் பாராளுமன்றத்திற்கு அருகாமையில் உள்ள Waisenhausplatz என்னுமிடத்தில் 28 ம் ஆண்டு கறுப்பு யூலை நினைவுகூரப்பட்டது.
பக்கம் 3, மொத்தம் 38 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.