புகைப்படங்கள்

பக்கம் 4, மொத்தம் 38 பக்கங்கள்« முதல்பக்கம்...23456...102030...இறுதிப்பக்கம் »

28. 07. 2011: பாரீஸ் நகரத்தை அண்மிக்கின்றது ஈருருளிப்பயணம்

கடந்த 23.07.2011அன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட ஆறு பேரின் ஈருருளிப்ப்யணம் 28.07.2011 வியாழக்கிழமையன்று பாரீஸ் நகரை அண்மிக்கின்றது. புதன்கிழமையன்றும் பல நகரசபை மேயர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

28. 07. 2011: கனடா-ரொறன்ரோவில் கொட்டும் மழையிலும் உணர்வுடன் ‘கறுப்பு யூலை’ வணக்க நிகழ்வு

தமிழின அழிப்பின் 28ம் ஆண்டு நினைவு நாளான யூலை 23.2011 சனிக்கிழமை சிறிலங்கா அரசின் மீது சர்வதேச போர்க்குற்ற நீதிவிசாரணை மேலும் தாமதமின்றி நடாத்தப்படவேண்டும், போர்க்கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்படவேண்டும், சிறிலங்காமீது இராஜதந்திர பொருளாதாரத்தடை விதிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துக் கனடியத் தமிழர் தேசிய அவையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட கறுப்பு யூலை நாள் நிகழ்வு கொட்டும் மழையில் தோய்ந்தவாறு உணர்வுபூர்வமாக நினைவுகோரப்பட்டது.

27. 07. 2011: மன்னார் டெலோ அலுவலகத்தில் தங்கத்துரை,குட்டிமணி ஆகியோருக்கு அஞ்சலி

1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 25 ஆம் மற்றும் 27 ஆம் திகதிகளில் கொழும்பு வெலிக்கடை வெஞ்சிறையில் படுகொலை செய்யப்பட்ட ஆரம்பத்தலைவர் தங்கத்துரை மற்றும் ஆரம்பத்தளபதி குட்டிமணி ஆகியோரது 28 ஆவது ஆண்டு நிணைவு அஞ்சலி ,(27-07-2011) புதன்கிழமை காலை மன்னார் மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(டெலோ) அலுவலகத்தில் அனுஸ்ரிக்கப்பட்டது.

27. 07. 2011: துரிதமடையும் கனடியத் தமிழர் அரசியல் செயற்பாடுகள்

புலம்பெயர்ந்த தமிழர் தாம் வாழும் நாடுகளில் அரசியல் செயற்பாடுகளில் உள்நுழைந்து ஒரு வருவான சக்தியாக மாறிவரும் சூழல் சமீப வருடங்களாக அதிகரித்து வருகின்றது. இவ்வகையில் கனடா, இங்கிலாந்து நோர்வே, ஜெர்மனி போன்ற நாடுகளில் ஈழத்தமிழர்கள் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

27. 07. 2011: கனடியத் தமிழ் இளையோர் முன்னெடுத்து வரும் G for Genocide’ எனும் விழிப்புணர்வுநிகழ்வு

யூலை 1983 இன் பொழுது தமிழ் மக்கள் மீது அநியாயமாக நிகழ்த்தப்பட்ட இனக்கலவரங்கள் இலங்கை அரசினாலும் சிங்கள மக்களினாலும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன. யூலை இனக்கலவரத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வை, வீட்டை, சொத்தை, நிம்மதியை, உறவினரை இழந்து தவிர்தனர், இன்றும் தவிர்த்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறான கறுப்பு யூலையினை தமிழ் மக்கள் மனதில் நிறுத்தி ஆண்டு தோறும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

26. 07. 2011: 23 ஜூலை 2011 நடை பெற்ற உலகத் தமிழர் அமைப்பு கருத்தரங்கம் . தலைப்பு : தமிழர்கள் – புலம் பெயர் தமிழர்கள் – சவால்களும் கடக்க வேண்டிய பாதையும்

இதில் பல்வேறு தமிழர் முன்னோடிகள் , கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள் , மனித உரிமை ஆர்வலர்கள் , சமூகத் தலைவர்கள் பங்கு கொண்டனர் . படுகொலை மீதான உலகக் கண்ணோட்டம் , தமிழினத் திற்கான தீர்வுகளில் தமிழர் பங்கு , விடுதலை புலிகள் போருக்கு பின்னான அவர்களது பங்கு , 2025 ம் ஆண்டிற்குள் தமிழர்கள் அடைய வேண்டிய இலக்கு, கல்வியின் பங்கு , பொருளாதார மேம்பாடு , தமிழர்களை அரசியல் ரீதியான மேம்படுத்துதல் , தமிழர் ப்ரச்சனையும் தமிழீழ போர் பற்றிய ஊடகங்களின் பங்கு போன்ற பல தலைப்புகளில் விவாதிக்கப் பட்டன . நிறைவாக சில தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன .

26. 07. 2011: ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஒன்றிணைந்து குரல் கொடுப்போம் – ஆந்திர மனித உரிமை செயல்பாட்டாளர்கள் பேச்சு

ஆந்திர மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஊடகவியலாளர் மன்றத்தில் சனிக்கிழமை 23 யூலை 2011 அன்று ‘போர்க்குற்றங்கள் இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தின்’ ஆந்திர மாநிலக் குழுவின் சார்பாக, ‘தமிழின அழிப்பை நிறுத்து! இலங்கை போர்க்குற்றவாளிகளைத் தண்டி!’ என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடத்தப்பட்டது.

26. 07. 2011: பிரான்ஸ் அரசிடம் நீதி கேட்டுத் தொரும் ஈருருளிப்பயணம். 250கி.மீற்றரைக் கடந்தது

பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து பாரீஸ் நகரத்தை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஆறுபேரினுடைய ஈருருளிப்பயணம். திங்கட்கிழமை  ஈருருளிப்பயணம் மூன்றாம் நாளில் மிகவும் ஆர்வத்துடன் தொடரப்பட்டுக்கொண்டிருக்கிறது.

26. 07. 2011: யேர்மனியில் நடைபெறும் ” கறுப்பு யூலை” நினைவு சுமந்த கவனயீர்ப்பு – பரப்புரைப் போராட்டங்கள்

இலங்கை இனவாத அரசின் இனப்படுகொலையின் ஓரங்கமான " கறுப்பு யூலை" 28 வது ஆண்டு நினைவாக யேர்மனியில் பல நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெறுகின்றது.

25. 07. 2011: இரண்டாவது நாளில் பிரான்ஸ் அரசிடம் நீதி கேட்டுத் தொரும் ஈருருளிப்பயணம்

பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து பாரீஸ் நகரத்தை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஆறுபேரினுடைய ஈருருளிப்பயணம். 24.07.2011ஞாயிற்றுக்கிழமை அன்று ஈருருளிப்பயணம் இரண்டாம் நாளில் மிகவும் ஆர்வத்துடன் சவேர்ன் என்ற இடத்திலிருந்து ஆரம்பமாகி பால்ஸ்பூர்க் என்ற இடத்தை சென்றடைந்த போது, ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராது அந் நகர மேயர் அவர்கள் வரவேற்றிருந்தார்.
பக்கம் 4, மொத்தம் 38 பக்கங்கள்« முதல்பக்கம்...23456...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.