பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் இலங்கையில் யாழ்ப்பாண மாணவர்கள் பாம்புகளை கைகளில் பிடித்தும் - கழுத்தில் சுற்றிப் போட்டும் வைத்திருந்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றது. தெகிவளையில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவின் ஏற்பாட்டில் யாழ். மகாஜனா கல்லூரியில் பாம்புகள் தொடர்பான விழிப்புணர்வூட்டல் பிரசாரம் ஒன்று 18 ஆம் திகதி இடம்பெற்றது.
தமிழ் மக்கள் மீதான இன அழிப்பின் முக்கிய நாளான கறுப்பு ஜூலை படுகொலைகளை நினைவேந்தி, பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன்பாக நேற்று (23-07-2011) நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.
சிங்கள இனவெறிக் காடையினரால் 1983 ஆம் ஆண்டு சிறிலங்காவில் நடாத்தப்பட்ட தமிழ் இனப் படுகொலையான கறுப்பு ஜுலை 28 ஆம் ஆண்டு நினைவு அமைதி ஊர்வலம் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று பிரான்ஸ் பாரிஸில் லாச்சப்பல் பகுதியில் மாலை 7 மணிக்கு ஆரம்பமாகி அன்வர் தேவாலய முன்றிலைச் சென்றடைந்தது.
நூரன்பேர்க் தமிழர் கலாச்சார ஒன்றியம் நடாத்திய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி 23.07.2011 அன்று காலை 9.30 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பித்தது.
ஐரோப்பாவின் இதயம் என வர்ணிக்கப்படும் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து பாரீஸ் நகரத்தை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஈருருளிப்பயணம்.
கனடா தமிழ் இளையோர் அமைப்பினால் கனடிய பல்கலைக்கழகங்களின் மட்டத்தில் ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்ட ‘Transition 101’ என்னும் ஆண்டு நிகழ்வு இம்முறையும் இரண்டாவது தடவையாக ரொறன்ரோ யோர்க் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இது, சமூக தொடர்பாடல், தமிழ்த் தேசிய கட்டுமானம், தமிழ் தேசிய அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம், தாய்மொழி மற்றும் கலாசாரம் போன்ற்றின் பேரில் தமிழ் இளையோர் அமைப்புக்கும் பல்கலைக்கழக தமிழ் மாணவர் சமூகத்துக்கும் உள்ள பங்கு தொடர்பான அறிவூட்டல் நிகழ்வாக அமைந்திருந்தது.
தமிழ்ப் பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டி லண்டனில் சிறப்பாக நடைபெற்றது.
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ்க் கல்விக்கூடங்களின் வடமேற்கு லண்டன் பகுதிப் பாடசாலைகளுக்கிடையிலேயே இந்த விளையாட்டுப்போட்டி நடாத்தப்பட்டது.
கடினமான ஒரு காலத்தின் பின்னர் வவுனியாவில் நிலைமைகள் முன்னேற்றமடைந்திருப்பதைக் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, அபிவிருத்தி என்பவற்றை உள்ளடக்கிய இந்த நிலைமை மேலும் தொடர வேண்டும் என்பதே இந்திய அரசாங்கத்தின் விருப்பமாகும் என வவுனியாவுக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்தியப் பிரதித் தூதுவர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
இங்கிலாந்தின் மிகப் பழைமைவாய்ந்த வோல்சிங்கம் மாநகரில் அமைந்துள்ள அன்னை மாதாவின் தமிழ் பெருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.