புகைப்படங்கள்

பக்கம் 6, மொத்தம் 38 பக்கங்கள்« முதல்பக்கம்...45678...2030...இறுதிப்பக்கம் »

10. 07. 2011: எக்ஸ்பிரஸ் அவின்யு வணிக வளாகத்தில் நடைபெற்ற இலங்கை புறக்கணிப்பு பரப்புரை (காணொளி, புகைப்படங்கள் இணைப்பு)

நேற்று சென்னை எக்ஸபிரஸ் அவென்யூவுக்கு எதிரே இலங்கை பொருட்களை புறக்கணிப்போம் (BOYCOTT SRILANKA) என பிரச்சாரம் செய்து கொண்டிருந்த இளைஞர்கள் அனைவரையும் பாதியில் வெளியேற்றியது போலீஸ். 15 பேர் சேர்ந்து கையில் அட்டைகளை வைத்துக் கொண்டு துண்டறிக்கைகளை விநியோகிக்க கூட அனுமதி வேண்டும் என்று போலீஸ் தெரிவித்தனர் . ஆனால் ஒரு மணிநேரத்திலேயே பெருவாரியான மக்கள் கவனம் ஈர்க்கப்பட்டது.

10. 07. 2011: சிறிலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகத்தை “இழுத்து மூடு” இளைஞர்கள் மறியல் ஆர்ப்பாட்டம்

சென்னையில் உள்ள சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை அலுவலகத்தை இழுத்து மூட வேண்டும் என்று கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 20 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மாலை ஆறு மணியளவில் இவ்விளைஞர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து வெளியில் விடப்பட்டார்கள்.

08. 07. 2011: பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் அரங்கம் நிகழ்வுகள் ! (புகைப்படங்களும் இணைப்பு)

தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை, சனநாயகபூர்வமாக வெளிப்படுத்தி நிற்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் அரங்கம் நிகழ்வு பிரித்தானியாவில் முன்னெடுக்கப்படுகின்றன.

07. 07. 2011: உலக தமிழர் பேரவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டர் பேர்ட் பலர் உலக தமிழர் பேரவையினால் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர் என உலக தமிழர் பேரவை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

06. 07. 2011: ஸ்கொட்லண்ட் கிளாஸ்கோவில் நடைபெற்ற தற்கொடையாளர்கள் நாள் நிகழ்வுகள்! (புகைப்படங்களும் இணைப்பு)

ஐக்கிய இராட்சியத்தின் ஸ்கொட்லண்ட் பகுதியின் தலைநகரான கிளாஸ்கோவிலும் தேசப்புயல்களான தற்கொடையாளர்களை நினைவுகொல்ளும் நினைவுவணக்க நிகழ்வு இடம்பெற்றது.

06. 07. 2011: எழுச்சியுடன் லண்டனில் நடைபெற்ற தற்கொடையாளர்கள் நினைவுவணக்க நிகழ்வு!(புகைப்படங்களும் இணைப்பு)

தமிழீழ விடுதலைப் போரின் தடைநீக்கிகளாக, உயிராயுதமாகி வெடித்து விடுதலைக்கு வலுச்சேர்த்த தற்கொடையாளர்களை நினைவுகொள்ளும் நினைவுவணக்க நிகழ்வு பிரித்தானியாவில் இடம்பெற்றது.

05. 07. 2011: யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ‘கரும்புலிகள் நினைவுநாள்’ நிகழ்வு

யாழ் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நினைவுநாள் நிகழ்வுகள் இன்று (05-07-2011) உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளன. கரும்புலிகள் நாளை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இறுக்கமான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்ட போதிலும், குறித்த இடமொன்றில் கூடிய பல்கலைக்கழக கல்விச் சமூகத்தினர் தமக்காக தற்கொடை புரிந்த கரும்புலிகளை நெஞ்சில் நினைவேந்தி வணக்கம் செலுத்தினர்.

05. 07. 2011: இந்தியாவில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளின் உரிமைகள் என்ன ? பிரதமர் வி.உருத்திரகுமாரன் (காணொளி இணைப்பு)

இந்தியாவில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளின் உரிமைகள் என்ன என்பது குறித்தான மனுவொன்று, நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ளதாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த சனி-ஞாயிறு ஆகிய நாட்களில் வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் தமிழ் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இதனைத் அவர் தெரிவித்தார்.

05. 07. 2011: மீளக் குடியேற்ற அழைத்துச் செல்லப்பட்டோர் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள பரிதாபநிலை!

வடமராட்சி கிழக்கில் மீள் குடியமர்வதற்குக் அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் தொடர்ந்தும் அப்பகுதிப் பாடசாலைகளில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் தங்கியிருந்த மக்கள் இறுதியாக முள்ளிவாய்க்காலில் இருந்து அல்லாரை நலன்புரி முகாமில் 2 வருட காலமாக தங்கியிருந்தனர்.

04. 07. 2011: தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் நடாத்தும் 14வது தமிழர் விளையாட்டு விழா

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் நடாத்தும் 14வது தமிழர் விளையாட்டு விழா.
பக்கம் 6, மொத்தம் 38 பக்கங்கள்« முதல்பக்கம்...45678...2030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.