இன்று இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தின் வாசலில் தமிழ் இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட 7வது புறக்கணிப்பு போராட்டம் நூற்றிக்கும் அதிகமான மக்களுடன் எழுச்சிகரமாக நடைபெற்றது. வயது வேறுபாடின்றி சிறுவர் முதல் பெரியோர் வரை இன்றைய இந்த புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்து இளையோருக்கு தோல் கொடுத்தார்கள்.
யேர்மனியில் மத்தியமாநிலத் தமிழாலயங்களுக்கிடையிலான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி 02.07.2011 சனிக்கிழமை முன்சன்கிளட்பாக் நகரில் அமைந்துள்ள கிரன்ஸ்லண்ட் விளையாட்டரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இன்று லண்டன் லோட்ஸ் மைதானத்தில் பிரித்தானியா மற்றும் இலங்கை அணி மோதுகின்றன. இந்த கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இலங்கையை ஒதுக்கவேண்டும் என்றும், இன அழிப்பில் ஈடுபட்ட இலங்கையோடு உலக நாடுகள் கிரிகெட் விளையாடக்கூடாது என்றும் தமிழ் இளையோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழர் தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பு இன்று சர்வதேச கவனம் பெற்றுள்ளதுடன் அதனை தழுவியே இன்றைய சர்வதேச செயற்பாடுகள் தவிர்க்கமுடியாது நகர்ந்து வருகையில் சிங்களத்தின் மீதான சர்வதேச அழுத்தங்கள் முன்னிலும் பலமாகப் பிரயோகிக்கப் பட்டு வருகின்ற வேளையில் யேர்மன் தலைநகர் பெர்லினில் அமைந்திருக்கும் சிறீலங்கா தூதரகம் இன்று யேர்மன் வெளிவிவகார அமைச்சின் ஆதரவுடன் ஒழுங்குசெய்யப்பட்ட "அனைத்து இனத்தவர்களின் விழா " என்னும் நிகழ்வை திசை திருப்பி தமக்கு மேலாக வலுப்பெறும் சர்வதேச விமர்சனங்களை முறியடிக்கும் முகமாக ஒரு சில ஈழத்தமிழர் என்றே கூற முடியாத விலைபோன துரோக கும்பல்களை இணைத்து பொய்ப் பிரச்சார நிகழ்வை நடாத்தினார்கள்.
தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசாங்கத்தின் கிறிக்கெட் அணியைப் புறக்கணிக்குமாறு கோரி பிரித்தானிய தமிழ் இளையோர் நேற்று (28-06-2011) லண்டன் ஓவல் மைதானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
அகதிகளாக தஞ்சம்கோரிய தமிழ் மக்களை நாடுகடத்த வேண்டாம் என கோரி, பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிரித்தானியப் பிரதமரின் காரியாலயத்திற்கு முன்னால் நேற்று மாலை 4:30 மணி முதல் 7:30 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யேர்மனியின் தென்மேற்கு மாநிலத்திற்காக மாவீரர் விளையாட்டுப் போட்டிகள் நேற்று 25.6.2011 இடம் பெற்றது இப்போட்டிகளில் தென்மேற்கு மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களின் மாணவர்கள் பொற்றேர்கள் ஆசிரியர்கள் பங்குபற்றினர்.
சென்னையில் இன்று மாலை மெரினா கடற்கரை மெழுகுவர்த்தி சுடர் ஏற்றும் நிகழ்வு நடை பெற்று கொண்டு இருக்கிறது. இதில் பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் ஈழத்தில் இறுதிப் போரில் இறந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.
நேற்று 23.06.2011 வியாழக்கிழகை காலை 9.30 மணிக்கு பேர்ன் பாராளுமன்றத்திடம் இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்பாதே என்று தமிழர்கள் மத்தியில் சேர்க்கப்பட்ட 4844 கையெழுத்துக்கள் ஒப்படைக்கப்பட்டது.
யேர்மன் Essen நகரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காட்டுமிராண்டிதனமான முதலாளித்துவத்துக்கு எதிரான பல்லின மக்களின் நிகழ்வில் ஈழத்தமிழ் மக்களும் கலந்துகொண்டனர் இவ் நிகழ்வில் காட்டுமிராண்டிதனமான முதலாளித்துவத்தினால் பல்வேறு நாடுகளில் போர் மற்றும் இனப்பிரச்சனை உருவாகின்றது என்ற அடிப்படையில் பல்வேறு இனத்தவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.