புகைப்படங்கள்

பக்கம் 8, மொத்தம் 38 பக்கங்கள்« முதல்பக்கம்...678910...2030...இறுதிப்பக்கம் »

21. 06. 2011: பிரான்சில் அகதி தஞ்சம்கோரும் தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்!

பிரான்சில் அகதி தஞ்சம்கோரும் தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிறன்னு (யூன்19) சிறப்பாக இடம்பெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவாகார அமைச்சகம், இந்த கலந்தாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

20. 06. 2011: ஜக்கியராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினாரால் நேற்று (19.06.2011) நடாத்தப்பட்ட இளந்தளிர் நிகழ்வு

ஜக்கியராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினாரால் நேற்று(19.06.2011) இளந்தளிர் நிகழ்வு நான்காவது தடவையாக “இளந்தளிர் 2011” எனும் பெயரில் மண்டபவம் நிறைந்த மக்களுடன் மேற்கொள்ளப்பட்டது. மாலை 4 மணி தொடக்கம் “ஈழத்தமிழரின் அடையாளம்” கண்காட்சி மக்கள் பார்வையிற்காக வைக்கப்பட்டிருந்தது.

10. 04. 2011: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் திருகோணமலையில் பதவியேற்பு

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு,கிழக்கு பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று காலை திருகோணமலையில் நடைபெற்றது.

04. 03. 2011: போரினால் பாதீக்கப்பட்ட மடு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு லண்டன் “லடர் யு.கே”அமைப்பு உதவி

வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர்களான செல்வம் அரைடக்கலநாதன்,எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் சரவணபவன் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் லண்டனில் இயங்கும் தொண்டு நிறுவனமான “லடர் யு.கே எனும் அமைப்பினால் வடபகுதி மாணவர்களுக்கு நேற்று புதன் கிழமை(02-03-11)ஒரு தொகை பாடசாலை சீருடைகள் வழங்கப்பட்டன.

01. 03. 2011: (சீமான், வைகோ, குளத்தூர் மணி, விடுதலை ராஜேந்திரன் ஆற்றிய உரைகள் இணைப்பு) ஈஸ்ட் ஹாம் பகுதியில் நடைபெற்ற “தேசத்தின் பேரன்னை” நினைவு வணக்க நிகழ்வு

நேற்று வடகிழக்கு லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதியில் உள்ள "ட்றினிட்டி சென்ரர்" மண்டபத்தில் நடைபெற்ற வணக்க நிகழ்விலேயே தேசத்தின் பேரன்னைக்கு மலர்வணக்கமும், அஞ்சலிக்கூட்டமும் நடைபெற்றது.

01. 03. 2011: ப்ரிகடியர் தமிழ்செல்வனின் நினைவு சின்னத்திற்கு கட்சி சார்பின்றி பிரான்சு நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மரியாதை

ப்ரிகடியர்  தமிழ்செல்வனின் நினைவு சின்னத்திற்கு கட்சி சார்பின்றி பிரான்சு நாட்டு La Courneuve மாநகர் ஆட்சி அதிபர், La Courneuve நாடாளுமன்ற உறுப்பினர், பிரதேச சபை தலைவர், மாநகரசபை உறுப்பினர்கள் என்று பலர் இன்று தமிழ்செல்வன் நினைவு சின்னத்துக்கு மரியாதை செலுத்தியதோடு, இதுவரை காலமும் சிறி லங்கா அரசு கொடுத்த அழுத்தங்கள், பொய் பிரசாரங்களையும் மீறி இன்று அந்த நினைவு சின்னம் தமிழ்செல்வனின் நிரந்தர சிரித்த முகத்துடன் கம்பீரமாக நிற்கிறது.

01. 03. 2011: பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க்கில் தேசத்தின் அன்னை பார்வதி அம்மா வீரவணக்க நிகழ்வு

பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் உள்ள குறுனன்பூர்க் மண்டபத்தில் தேசத்தாய் பார்வதி அம்மாவின் வீர வணக்க நிகழ்வு ஐரோப்பியத் தமிழர் ஒன்றியத் தலைவர் திரு. ந. கிருபானந்தன் தலைமையில் நடைபெற்றிருந்தது.

01. 03. 2011: டென்மார்க் கேணிங் நகரில் தமிழீழத் தேசத்தாய் பார்வதி அம்மாவுக்கு அஞ்சலி நிகழ்வு

26-02-2011 சனி அன்று தேசத்தாயை நினைவு கூர்ந்து வணக்க நிகழ்வு இடம்பெற்றது வணக்க நிகழ்வில் தேசத்தாயின் திருவுருவப்படத்திற்கு ஈகைச் சுடறேற்றி வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து மக்களால் மலர்வணக்கம் செலுத்தப்பட்டு கவிதைகளும் இரங்கலுரைகளும் தேசத்தாயின் நினைவாக இடம் பெற்றது.

01. 03. 2011: இம்மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கும், தேசத்தின் பேரன்னைக்குமான நினைவுவணக்க நிகழ்வு நேற்று பிரித்தானியாவில் இடம்பெற்றது

மூத்த தளபதி லெப்.கேணல் பொன்னம்மான், லெப்.கேணல் கெளசல்யன், மற்றும் வான் கரும்புலிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் உட்பட இம்மாததில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களையும், "தேசத்தின் பேரன்னை" பார்வதியம்மாவினதும் நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெற்றது.

27. 02. 2011: கொக்குவில் இந்து மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி – சிறார் படையை உருவாக்குகிறதா சிறிலங்கா?

சிறிலங்கா விமானப்படை தியத்தலாவ முகாமில் மாணவ கடெற் பயிலுனர்களுக்கு ஆயுதப் போர்ப்பயிற்சிகளையும் வழங்கியுள்ளது. இந்தப் பயிற்சி முகாமுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களும், மட்டக்களப்பில் இருந்து முஸ்லிம் கல்லூரி மாணவர்களும் சிறிலங்கா விமானப்படையினரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
பக்கம் 8, மொத்தம் 38 பக்கங்கள்« முதல்பக்கம்...678910...2030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.