புகைப்படங்கள்

பக்கம் 9, மொத்தம் 38 பக்கங்கள்« முதல்பக்கம்...7891011...2030...இறுதிப்பக்கம் »

25. 02. 2011: குடாநாடு எங்கே செல்கிறது? கோப்பாயில் சிசுவைப் புதைத்த தாய்!

பிறந்த உடனே புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் நேற்று காலை கோப்பாய் பகுதியில் தோண்டி எடுக்கப்பட்டது. சிசுவின் தாய் விளக்க மறியலில் வைக்கப்பட்டார். மேலும் மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

24. 02. 2011: நம்பிக்கையுடன் இருங்கள் நம் உரிமைகளை பெறுவோம் – சிவசக்தி ஆனந்தன்!

“நீங்கள் நம்பிக்கையுடன் இருங்கள் நாம் இழந்த அனைத்திற்கும் ஈடாக எமது உரிமையை வென்றெடுப்பது எமது கடமையாகும். அதுவே யுத்தத்தில் மரணித்த காயமுற்ற அனைவருக்கும் நாம் செய்யும் கைமாறாகும்.” என வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

24. 02. 2011: வெள்ளைவான் கடத்தலை எதிர்த்து துவிச்சக்கர வண்டியில் லண்டனை சுற்றி பிரச்சாரம்

அரசினால் நாடாத்தப்படும் வெள்ளைவான் கடத்தலை எதிர்த்தும், எம் இனம் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அழிக்கப்படுவதை எதிர்த்தும் ஓங்கிக் குரல் கொடுக்கும், முகமகவும் இவ்வாறான நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு தமிழரும் விழிப்போடும், உணர்வோடும் உரத்துக் குரல்கொடுத்து உலகநாடுகள் எங்கும் போராட்டங்களை மேற்கொள்ளவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் இப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

24. 02. 2011: பிரித்தானியத் தமிழர்களின் பேரெழுச்சியுடன் “தேசத்தின் பேரன்னைக்கு” இறுதிவணக்க நிகழ்வு நேற்று லண்டனில் நடைபெற்றது

தேசத்தின் பேரன்னைக்கு தாயகத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெற்ற அதேவேளை பிரித்தானியத் தமிழர்களாலும் நேற்று இறுதிவணக்கம் செலுத்தப்பட்டது. லண்டன் ஈலிங் ரவுண் ஹோல் "பிறின்ஸ் மண்டபத்தில்" நேற்று (22-02-2011) மாலை 6 மணிக்கு இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகின.

24. 02. 2011: பெல்ஜியத்தில் அன்னை பார்வதிக்கு இறுதி அஞ்சலி நிகழ்வு

நேற்று 22-02-2011 பெல்ஜியத்தில் அன்னை பார்வதிக்கு இறுதி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பெல்ஜியம் வாழ் தமிழ் மக்கள் கலந்துகொண்டு மலர்துவியும் தீபம் ஏற்றியும் அஞ்சலி செய்தனர்.

23. 02. 2011: யாழ் பல்கலையில் பொலிசாரின் அராஜகத்தை எதிர்த்து சுவரொட்டிகள்

யாழ் பல்கலையில்  பொலிசாரின் அராஜகத்தை எதிர்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. நண்பகல் பன்னிரண்டு மணியிலிருந்து மாணவர்கள் அவசர பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது. மேலதிக விபரங்கள் பின்னர்.

23. 02. 2011: ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் (LIFT) அமர்வு வெகுசிறப்பாக பிரான்சில் இடம்பெற்றுள்ளது

ஈழத்தமிழர்களுக்கான ஒர் பலம்மிக்க திரைத்துறைக்கான தளதினை உருவாக்கும் நோக்கில், பிரான்சில் தோற்றம் பெற்றுள்ள ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் (லிவ்ஃற்) பிரான்சில் கருத்தாய்வு அமர்வொன்றை நடாத்தியுள்ளது. கடந்த சனி - ஞாயிறு (பெப்ரவரி 19-20) ஆகிய இருநாட்கள் இடம்பெற்ற இந்த அமர்வில், திரைத்துறை சார்ந்த கலைஞர்களுடன், கலை, இலக்கிய, சமூக பங்காளர்கள்,ஆர்வலர்கள் என பலரும் பங்கெடுத்திருந்தனர்.

23. 02. 2011: தமிழர்தாய்க்கு குவைத்தில் வீரவணக்கம்

குவைத்தில் தமிழ் இன உணர்வாளர்கள் 21.02.2011 அன்று ஒன்றுகூடி தமிழர்தாய்க்கு வீரவணக்கம் செலுத்தினர்.

23. 02. 2011: ACT NOW PR: GAP & SRI LANKA – TIME TO LEAVE!

UK based Human Rights group Act Now re-launched its' 2011 Global GAP pickets last weekend. Act Now has been running throughout last year pickets of GAP stores in conjunction with its' US partners in protest at the company's trading relationship with Sri Lanka.

22. 02. 2011: (2ம் இணைப்பு) ஈழத்தாய் பார்வதி அம்மாளின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமமானது உள்ளுர்,தமிழக அரசியல்வாதிகள் இரங்கல் உரை

தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் ஈழத்தாய் பார்வதி அம்மாளின் பூதவுடல் இன்று மாலை 4.50 மணியளவில் அக்கினியுடன் சங்கமித்தது. அமரர் வேலுப்பிள்ளையின் ஒன்று விட்ட சகோதரர் சங்கரநாரயணன் சிதைக்குத் தீ மூட்டினார்.   ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்ட அன்னாரது பூதவுடல் தேசியத் தலைவரின் வல்வெட்டித்துறை வீட்டுக்கு முன்னால் பத்து நிமிடங்கள் வைக்கப்பட்டிருந்ததாகத் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
பக்கம் 9, மொத்தம் 38 பக்கங்கள்« முதல்பக்கம்...7891011...2030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.