சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றின் அவசியத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்சியாக வலியுறுத்தி வரும் நிலையில், நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில், தமிழர் தரப்பின் இராஜதந்திரச் செயற்பாடுகளை, நா.த.அரசாங்கம் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவை மையப்படுத்தி பல்வேறு விடயங்கள் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கைத்தீவில் தமிழர்களின் தாயகப் பிரதேசங்களில், சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவமயமாக்கல், பௌத்தமயமாக்கல், சிங்களமயமாக்கல் விடயங்களை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தி, உப மாநாடொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் கொலைக்களம், தண்டிக்கப்படாத குற்றங்கள் என்னும் மற்றொரு காணொளியை, சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் எதிர்வரும் 14ம் திகதி வருகின்ற புதன்கிழமை இரவு 10.55 மணிக்கு காட்சிப்படுத்துகின்றது.
ஜெனீவா இடம்பெற்றுவரும் 10வது மனித உரிமைகளுக்கான அனைத்துலக திரைப்படவிழாவில், தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர்குற்றங்கள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகளின் 19வது மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில் அமெரிக்க அரசானது இலங்கை தொடர்பாகக் கொண்டுவந்த வரைவு பிரேரணையும் அதன்பின்னர் கூட்டப்பட்ட மாநாட்டில் பன்நாட்டுப் பிரதிநிதிகளின் கருத்துக்களும் அடிப்படையில் இலங்கை அரசின் படிப்பினைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் மேலும் சில பயன் தரத்தக்க பரிந்துரைகளையும் அடக்கி இருந்தன
ஈழத்தமிழனத்தின் மீது சிறிலங்கா அரசு மேற்கொண்ட போர்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம், இனப்படுகொலை ஆகியனவற்றுக்கு பொறுப்புக்கூறும் வகையில், அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றை வலியுறுத்தும் வகையிலான காத்திரமான உள்ளடக்கத்தை, ஜெனிவாவில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மான வரைபில் எதிர்பார்ப்பதாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர் தாயகத்தில் தொடர்கதையாகும் பெண்களின் அவலம் போக்கிட உலகப்பெண்கள் நாளில் அணிதிரள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ;கள், சிறுவர், முதியோர் விவகார அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக பெண்கள் நாளை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள், தலைமைச் செயலகத்தால் வெளிட்டுள்ள அறிக்கையின்முழு வடிவம்
போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் அனைத்துலக விசாரணைப் பொறிமுறையொன்றை வலியுறுத்தும் வகையிலான காத்திரமான உள்ளடக்கத்தை ஜெனிவாவில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மான வரைபில் எதிர்பார்ப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைச் சபையில், சிறிலங்காவுக்கு மலேசியா ஆதரவு தெரிவிக்குமெனில், ஆட்சியில் இருக்கும் அரசாங்கமானது, வரும் தேர்தலில் மலேசியத் தமிழர்களின் வாக்குகளை இழக்க நேரிடுமென மலேசிய ஊடகமொன்று எச்சரித்துள்ளது.