புலத்தமிழர் செய்திகள்

பக்கம் 2, மொத்தம் 176 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

05. 05. 2012: முள்ளிவாய்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தலில் ஈழத்தமிழர்களுக்கான நீதியை வென்றெடுக்க உரக்க குரல் கொடுப்போம் ! நாடுகடந்த தமிமீழ அரசாங்கம்

சிங்கள தேசமானது, மே மாதத்தினை போர் வீரர்கள் மாதமாக பிரகடனப்படுத்தியுள்ளதோடு, மே-18ம் நாளினை போரின் வெற்றி நாளாக கொண்டாட தயாராகி வரும் நிலையில், உலகெங்கும் வாழும் தமிழர்கள், முள்ளிவாய்கால் மூன்றாம் ஆண்டினை நினைவேந்தி, ஈழத்தமிழர்களுக்கான நீதியினை வென்றெடுக்க உறுதுபூணுவோமென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

04. 05. 2012: மரம் வளர்த்தல் தொடர்பாக உயரிய எண்ணங்களைக் கொண்ட தமிழர் முகத்தின் அனைத்து அகவையினரும் பங்கெடுக்கும் இந்நிகழ்வு

மரம் வளர்த்தல் தொடர்பாக உயரிய எண்ணங்களைக் கொண்ட தமிழர் முகத்தின் அனைத்து அகவையினரும் பங்கெடுக்கும் இந்நிகழ்வு இரண்டாவது ஆண்டாக முன்னெடுக்கப்படுகிறது.

03. 05. 2012: அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கிடைத்தும் தந்தையையுடன் வாழமுடியாத இலங்கைச் சிறுவன்

காலவரையறையின்றி தமது தந்தையை பிரிந்து நிற்கும் 5 வயதான இலங்கை தமிழ் சிறுவன் ஒருவன் குறித்து அவுஸ்திரேலிய செய்திதாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

02. 05. 2012: பிரித்தானிய தமிழர் விளையாட்டுத்துறை பணிநியமணம்

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்களை ஒருங்கிணைப்பதிலும் உடல் உள வலுப்படுத்தலிலும் விளையாட்டுப் போட்டிகள் முக்கிய இடத்தை வகிக்கின்றது ஐரோப்பாவில் கோடைகாலம் ஆரம்பமாகிவிட்டதனால் இளைஞர்களும், சிறுவர்களும் விளையாட்டுத்திடல்களுக்கு மிக ஆர்வத்துடன் செல்வதனைக் காண முடிகின்றது

01. 05. 2012: இலங்கையின் கொலைக்களங்கள் உடனடியாக உங்கள் வாக்குகளைப் பதிவுசெய்யுங்கள்.

தமிழர்கள் மீதான சிறிலங்காவின் போர்குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்திய ஆவணப்படமாகவுள்ள பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் Bafta TV Awards 2012 விருதுக்கான போட்டிக்களத்தில் உள்ளது.Please click here

01. 05. 2012: வன்னி இறுதிப் போர் படுகொலைகளை இனப்படுகொலையாக அறிவிக்குமாறு கோரி ஹிலாரிக்கு தொலைநகல் அனுப்பும் போராட்டம்

வன்னி இறுதிப்போர் படுகொலைகளின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு,  அங்கு இடம்பெற்ற  படுகொலைகளை இனப்படுகொலையாக அங்கீகரித்து அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று கோரி அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கு தொலைநகல் அனுப்பும் போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

30. 04. 2012: சிறிலங்கா விவகாரத்தினை கையிலெடுத்த அமெரிக்க மாணவ சமூகம் !

Amnesty International அமைப்பின் ஒருங்கிணைப்பில், அமெரிக்க உயர்கல்வி மாணவ சமூகத்தினால், நியூ யோர்க் நகரில் சிறிலங்கா தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வொன்று, பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

30. 04. 2012: அய்யா!! கலைஞரே!! இளையதலைமுறையினை இழிவாக கருதவேண்டாம்:ஓர் பகிரங்க மடல்

ஈழத்தமிழன் இதயங்களில் மட்டுமல்ல உலகத்தமிழனின் மனங்களிலும் மரணித்துப்போன முன்நாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களே!!

29. 04. 2012: செங்கல்பட்​டு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுங்கள்: தமிழக முதல்வருக்​கு கடிதம்

போர்ச்சூழல் காரணமாக தமிழகம் வந்த எம் ஈழத்தமிழர்களில் சிலரை மூன்று வருடங்களாக அவர்கள் தங்கள் வழக்குகளைக் கூட எடுத்து நடாத்த முடியாத வகையில் தொடர்ந்தும் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைத்திருப்பது புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் வேதனையுடன் பார்க்கப்படுகிறது.

28. 04. 2012: இலங்கைக்கு சென்று மதசுதந்திரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்: ஐக்கிய நாடுகளுக்கு ருத்திரகுமாரன் கடிதம்

இலங்கைக்கு சென்று அங்கு இடம்பெற்ற மதங்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கெதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகளிடம் கோரியுள்ளது.
பக்கம் 2, மொத்தம் 176 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.