பிரான்சின் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளின் மக்கள் சந்திப்புகள் இருவேறு இடங்களில் இடம்பெறவுள்ளதாக தகவற்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு, பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமை மூடக்கோரி சென்னை நினைவக அரங்கம் அருகில் வழக்குரைஞர் புகழேந்தி தலைமையில் நேற்று மாலை 6 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு சிறப்பு முகாம் ஏதிலிகள் மூன்று பேர் அவசரமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிறி லங்கா ஈழத் தமிழர் மீது மே 2009 நடத்திய படுகொலைகளின் 3ஆம் ஆண்டு நிறைவில் கனடியப் பாராளுமன்றத்தில் ஊடகவியலாளர் சந்திப்புடன் சனல் 4 ஆவணக் காணொளி 'சிறி லங்காவின் கொலைக்களம் 2' திரையிடப்பட்டது.
தமிழர்கள் மீதான போர் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பில், சிறிலங்கா அரசுத் தலைவரிடம் கேள்வியெழுப்புங்கள் என, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் , தென் கொரிய அதிபரிடம் கோரி;க்கை விடுத்துள்ளார்.
சுதந்திர தேசமாக விடுதலைப் பெற்றுள்ள தென் சூடானில், சுதந்திர தமிழீழத்திற்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்காரியாலம் அமைக்கும் பொறுப்பினை, அவுஸ்லியாவின் சிட்னி வாழ் தமிழர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
எட்டாவது நாளாக செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் உண்ணாநிலையை தொடர்கின்றனர். உண்ணாநிலை இருந்து வரும் 13 பேரும், மிகவும் சோர்வாக காணப்படுகின்றனர். ஆனாலும், விடுதலை கோரிக்கையில் உறுதியாக உள்ளனர்.
இந்திய மத்திய அரசு மீது அழுத்தத்தைப் பிரயோகித்து, சிறீலங்காவிற்கு எதிரான ஜெனீவாத் தீர்மானத்தினை இந்திய மத்திய அரசு ஆதரிப்பதற்கு, ஒருவகையில் காரணமாயிருந்தமைக்காகவும், மற்றும் இந்திய பாராளுமன்றக் குழுவின் சிறீலங்காப் பயணத்தின் நோக்கத்தில் இருக்கக்கூடிய அபந்தத்தையும் அதில் இருக்கக்கூடிய தமிழர் விரோத ஆபத்தையும் வெளிச்சம்போட்டுக் காட்டியதுடன் அக்குழுவில் பங்குபெறாமல் அதை நிராகரித்ததற்காகவும், தமிழர் நடுவம் தமிழக முதல்வரை பாராட்டி அக்கடிதத்தை வரைந்துள்ளது.
கொன்சவேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. பற்றிக் பிறவுண், என்.டி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முனைவர் கிறெக் இசுகொட் மற்றும் லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி யூடி செரகோ ஆகியோரின் ஆதரவுடன் இக்காணொளி ஒட்டாவா பாராளுமன்ற வளாகத்தில் காண்பிக்கப்பட உள்ளது. தமிழ்க் கனடியர்களின் சார்பில் கனடியப் பாராளுமன்ற உறுப்பினருக்கும் செனற் சபை உறுப்பினருக்கும் என தனிப்பட்ட முறையில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய-விக்ரோரிய மாநிலத்தின், Geelong நகரத் தொழிற்சங்க கூட்டமைப்பின் அலுவலகக் கட்டிடத்தில், தமிழீழத் தேசியக் கொடி உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டது.