புலத்தமிழர் செய்திகள்

பக்கம் 30, மொத்தம் 176 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2829303132...405060...இறுதிப்பக்கம் »

15. 10. 2011: சுதந்திரமான சர்வதேச விசாரணையொன்றை வலியுறுத்துகிறோம் ! அமெரிக்காவின் மாநில ஆட்சிபீட பிரதிநிதிகள் கூட்டாக கோரிக்கை

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் ஏனைய மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவையானது என அமெரிக்காவின் Massachusetts மாநில ஆட்சிபீட பிரதிநிதிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

15. 10. 2011: கனடாவில் சிறீலங்கா சுற்றுலா கண்காட்சி ரத்து

ஓக்டோபர் மாதம் 16ம் 17ம் திகதிகளில் மிஸிஸாகா நகரில் உள்ள லிவிங் ஆர்ட்ஸ் மண்டபத்தில் நடக்கவிருந்த சிறீலங்கா அரசின் சுற்றுலா மற்றும் வர்த்தக கண்காட்சி காரணங்களின் அறிவிப்பின்றி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

13. 10. 2011: அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாளை எழுச்சியோடு நடாத்த முன்வருவோம்.

எதிர்வரும் நவம்பர் 27 அன்று பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாளை பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் நடாத்துவது தொடர்பாக  கலந்துரையாடல் ஒன்று தேசிய நினைவேந்தல் அகவத்தினால் நடாத்தப்படவுள்ளது.

13. 10. 2011: போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் சிறீலங்கா பரப்புரை

தமிழின அழிப்பை மூடிமறைத்து, போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் சிறீலங்கா அரச அதிபரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின்’ செயற்பாடுகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில்சட்டவாளர்களுடனான  சந்திப்பு ஒன்றை சிறீலங்கா மேற்கொண்டிருந்தது

13. 10. 2011: இம் மாதங்களில் வீரச்சாவைத் தழுவிய அனைத்து மாவீரர்களையும் நினைவு

முதற் பெண் மாவீரர் மாலதி மற்றும் விக்டர், குமரப்பா, புலேந்திரன், சுப.தமிழ்ச்செல்வன் உட்பட இம் மாதங்களில் வீரகாவியமாகிய மாவீரர்கள் நினைவு எழுச்சி வணக்க மாலை

12. 10. 2011: தமிழ் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவிடம் போர்க்குற்றவியலுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்! ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு

அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் அமெரிக்காக வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்ச அரசின் இனப்படுகொலைக்கு எதிராக அமெரிக்கா அரசின் ஆதரவைப் பெறுவதிலேயே முக்கிய விடயமாக கருதி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

12. 10. 2011: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை வலுப்பதடுத்​த ஐந்து உறுப்பினர்​கள் மக்கள் பிரதிநிதிக​ளாக தேர்வு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு ஐந்து உறுப்பினர்கள் உபதேர்தல் மூலம்  மக்கள் பிரதிநிதிகளாக பிரான்சில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

11. 10. 2011: தேசிய மாவீரர் நினைவெழுச்சி நாள்

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய மாவீரர் குடும்பத்தவர்களிற்கு ஓர் அன்பான வேண்டுதலும் அழைப்பிதழும்

11. 10. 2011: சனல் 4 காணொளிக்கு எதிரான காணொளி பிரித்தானிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் : தொடரும் சிறீலங்காவின் பரப்புரை

உலக நாடுகளின் கண் தமிழ் மக்கள் மீது இடம்பெற்ற போர் குற்ற விசாரணை மீது கவனம் செலுத்த ஆரம்பித்ததன் பின்னனியில் இலங்கை அரசின் பரப்புரை முழுவீச்சில் நடைபெறுகின்றன

10. 10. 2011: தமிழீழப் பெண்களின் வீரத்தின் தியாகத்தின் விடுதலை வேட்கையின் முகம் மாலதி.!!

சமூக மூட நம்பிக்கைகளும், பிற்போக்குத்தனங்களும், ஆண்மேலாதிக்க ஒடுக்கமுறைகளும், பாகுபாடுகளும் செழித்துவளர்ந்திருந்த, எமது தமிழீழச் சமூகச் சூழலில் இருந்து, தன்இனத்திற்காக, தன்எழுச்சியாய் போராடப் புறப்பட்டு, தன் உயிரைக் கொடையாகக் கொடுத்த முதலாவது பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன்ட் மாலதி.
பக்கம் 30, மொத்தம் 176 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2829303132...405060...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.