போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய பறக்கும் காரை கண்டுபிடித்துள்ளனர்.
உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா- தென் கொரியாவின் மோதல் போக்கு அதிகரித்துள்ளதால், அமெரிக்கா புதுவிதமான ஆயுதத்தை பரிசோதித்து பார்த்துள்ளது.
பூமியைப் போன்று மனிதன் வாழ ஏற்ற சூழ்நிலை கொண்ட 2 புதிய கோள்களை நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. இந்த இரண்டு கோள்களும் பார்ப்பதற்கு பூமியைப் போலவே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்டன் தொடர் குண்டுவெடிப்பின் பின்னணியில், வெளிநாட்டு தொடர்பு உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எஃப்.பி.ஐ. கருதுவதாக தெரிகிறது. குண்டுவெடிப்பு திட்டம் வெளிநாடு ஒன்றில் போடப்பட்டு, அமெரிக்காவில் உள்ள ஒருவரால், அல்லது சிலரால் நிறைவேற்றப் பட்டிருக்கலாம் என உளவுத்துறை கருதுகிறது.
பாஸ்டன் குண்டுவெடிப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகை, “சர்வதேச பயங்கரவாதம்” என்ற சொற்பதத்தை பயன்படுத்தியுள்ளது. இந்த புலனாய்வில் உளவுத்துறை எஃப்.பி.ஐ. சார்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி Richard DesLauriers, “இந்த குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், விடமாட்டோம்” ...
இறந்த பெண்ணின் கர்ப்பப்பையை எடுத்து மற்றொரு பெண்ணிற்கு பொருத்தபட்ட மருத்துவ சாதனையில் தற்போது மாற்று கர்ப்பப்பை பொருத்தப்பட்ட பெண் கர்ப்பம் அடைந்துள்ளார்.
உலகின் விலையுயர்ந்த ஐபோனின் பெறுமதி என்னவென்று உங்களுக்கு தெரியுமா ? ஊகித்தாவது கூற முடியுமா?
எவ்வளவு தான் ஊகித்தாலும் இத்தொகையைநெருங்கிக்கூட இருக்க மாட்டீர்கள் காரணம் அந்தக் தொகைக்கு ஒரு கையடக்கத்தொலைபேசியை கனவில் கூட நினைத்திருக்க மாட்டோம்.
ஆம், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த வடிவமைப்பாளரான ஸ்டுவர்ட் ஹக்ஸினால் வடிவமைக்கப்பட்டுள்ள ஐபோன் 5 வின் விலை 15.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இலங்கை நாணயத்தின் படி கிட்டத்தட்ட 191 கோடியே 86இலட்சம் ரூபாக்களாகும்.
தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள இது கறுப்பு மற்றும் வெள்ளை வைரங்கள் பதிக்கப்பட்டது.
ஆடம்பரப் பொருட்களை வடிவமைக்கும் ஹக்ஸ் ஆரம்பத்தில் சீன வர்த்தகர் ஒருவருக்காகவே ...
நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளின் காரணத்தினால் நாம் உபயோகிக்கும் செல்போன், லேப்-டாப், ஆன்லைன் வணிகம், வங்கிக் கணக்குகள் என ஒவ்வொன்றிற்கும் ஒரு பாஸ்வேர்டு உபயோகிக்கிறோம். சில நேரங்களில் அவற்றை மறந்து விடுவதால் திண்டாட நேரிடுகிறது. மேலும், அவற்றைத் திருட்டுத்தனமாக இயக்கி மோசடியில் ஈடுபட முடிகிறது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள, ஒரு விவசாயியின் வீட்டு சமையலறையில், 30 கோடி ரூபாய் மதிப்புள்ள, விண் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், சியூடாட் ரியால் பகுதியைச் சேர்ந்தவர் லோபஸ்.
சமூக வலைத்தளமான பேஸ்புக் ஒரு புதிய விஷயத்தில் அடியெடுத்து வைக்கிறது. வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் பேஸ்புக் போன் (Facebook phone) ஒலிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இங்கிலாந்தில் உள்ள லண்டனை சேர்ந்த நிக்டி அலோஸ்சிகா என்ற 17 வயது சிறுவன் செல்போனில் செய்தி வாசிக்கும் முறையை (மொபைல் நியூஸ் ரீடர் ஆப்சன் சம்லி) கண்டுபிடித்து இருக்கிறான். அதை 'யாகூ' செய்தி நிறுவனம் அவனிடம் இருந்து வாங்குகிறது.