தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் ஏதிலிகள் , தங்களை அங்கிருந்து விடுவிக்க கோரி தொடர்ந்து நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு இதுவரை எவ்வித பதில் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்" நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய நூலாசிரியர் பழ.நெடுமாறன் அவர்கள் தனக்கும் சகோதரர் வைகோ, கொளத்தூர் மணி ஆகிய தங்கள் மூவருக்கு மட்டுமே தெரிந்த பல இரகசியங்களை இந்நூலில் பதிவு செய்துள்ளதை தெரிவித்துள்ளார்.
கவிஞர் வாலி அவர்கள் ஈழத் தமிழர்கள் பற்றி கவி வடித்து, தன் சொந்தக் குரலிலேயே வாசித்து அரங்கிலுள்ளோரை மெய்சிலிர்க்க வைத்திருக்கின்றார்.
அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் தென்பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடற்படையைச் சார்ந்த ஜெட் விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
ஈழவிடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுப் பெருந்துயராக அமைந்த, மே-18 தமிழீழ தேசிய துக்க நாளினை, உலகளாவிய ரீதியில் முன்னெடுப்பது குறித்து விவாதிக்க, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.
சனல்-4க்கு பதிலடி என்ற முழக்கத்துடன் சிறிலங்கா அரசு இன்று செவ்வாய்கிழமை விவரணப்படமொன்றை திரையிடவுள்ள நிலையில் சிறிலங்கா அரசின் கபடத்தனங்களை அம்பலப்படுத்தி ஐ.நா மனித உரிமைச் சபையில் தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் உள்ள சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இலங்கையின் கொலைக்களங்கள் என்னும் ஆவணப்படத்தின் 2ம் பாகமாகிய "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" என்னும் காணொளியை வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைச் சபையின் நேற்றைய (13-03-2012) செவ்வாய்கிழமை அமர்வின் போது, எட்டு நாடுகளின் கருத்துவளைப்புக்களை, சிறிலங்கா எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
அமெரிக்காவினால் ஐ.நா மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேணைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்ற குரல், தமிழகமெங்கும் ஒங்கி ஒலித்து வந்த நிலையில், தற்போது இந்திய மைய அரசியல் வட்டத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவின் நல்லிணக் ஆணைக்குழுவின் அறிக்கையினை மையப்படுத்தி அமெரிக்காவினால் பிரேரணையொன்று சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை முன்னிறுத்தி சர்வதேச சுயாதீன் விசாரணைக்கான குரல்கள் வலுத்து வருகின்றன.