திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது.
அமரர் மா. கனகரெத்தினம் அதிபர், தான் வாழ்ந்த 38 வயதுக்குள் தன் மேலதிகாரிகள், தன்னோடொத்தவர்கள், தன்னிலும் இளையோர் ஆகிய முத்திறத்தாரையும் ஒரு சேரக் கவர்ந்துள்ள தனிச்சிறப்புப் பெற்றவர். தன் நல்லெண்ணத்தாலும், ஆளுமையினாலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் அவர் விரும்பப்பட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை பயிற்சியில் பயிற்சி வல்லுனராக விளங்கியவர் வசந்தன் மாஸ்ரர் .
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் வித்தகனாக செயற்பட்ட வசந்தன் மாஸ்ரர் என்று அழைக்கப்படும், மன்னார் மாவட்டத்தை நிலையான முகாவரியாக கொண்ட ஆறுமுகம் அன்பழகன் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகளின் படைத்துறைபள்ளியின் ஆசானாக செயற்பட்டு பின்னர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பாதுகாப்பு அணியின் செயற்பாட்டாளனாகவும் பாதுகப்பு அணியின் ...
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின் (வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன். இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார்
யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணிதான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாக இருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.
தென்மராட்சிப் பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின் (மகாலிங்கம் ...
விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள் , மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம் , ஆனாலும் மறைமுக கரும்புலிகள், போராளிகளிகளின் உள்ளுணர்வுகளும், ,தியாகங்களும் பலரது மனங்களுள்ளே மறைந்து போகிறது ஆனாலும் அவர்களின் வாழ்வும் மண்ணிற்க்காய் தம்மை அர்ப்பணித்த தற்க்கொடையும் எம்மையெல்லாம் எம் இலக்கு நோக்கிய பயணத்தில் உந்தி தள்ளும் விசையாக செயற்பட ஏதுவாகிறது
அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி.
கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை ஆற்றலாளராக திகழ்ந்ததில் பக்கத்துறையாக விளங்கியவர்களில் ஜொனி குறிப்பிடத்தக்கவர்.
பருத்தித்துறை புலோலியில் சாரையடி என்ற ஊரில் 21.5.1962 இல் பிறந்தார். அவரது இயற்பெயர் விக்கினேஸ்வரன் விஜயகுமார். பல்கலைக்கழகத்தின் விவசாயப்பீட மாணவராக இருந்தபோது 1983 ஆம் ஆண்டு போராட்டத்தில் இணைந்து கொண்டார்.
சிறுவனாக இருந்தபோதே போராட்டத்திலே ...
தமிழீழ விடுதலை வரலாற்றில் விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன் மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் கும்பல் கோழைத்தனமாகக் கொன்று இரத்த வெறி தீர்த்த அந்த துயரச் சம்பவம் நடந்து எட்டாண்டாகிறது. இன்னும் தாயக மக்களிடையே கௌசல்யன் என்ற அந்த வீரமறவனின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும் தியாகமும் மாறாது மனக் கண் முன்னே நிற்கின்றது.
லெப்.கேணல் கௌசல்யன் கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக் கொண்டவர். தமது பாடசாலைப் பருவம் அது சிங்கள வெறி இராணுவம் தமிழர் ...
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…
வணக்கம்.
வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க ...
வீரத்தேவனின் துணிகரமான சாதனைகளை என்னால் எழுத்தில் வர்னிக்க முடியாதவை இருந்தாலும் எனது மனதைத்தொட்ட ஒரு நிகழ்வை மட்டும் அவனது மன உறுதியை எழுத உந்தியது.1996ஆம் ஆண்டு 9ஆம் மாதம் ஆரம்பத்தில் மட்டு அம்பாறை மாவட்ட புலனாய்வுப்பகுதிக்குப் பொறுப்பாளராக இருந்த திரு நிக்சன் அவர்கள் வவுனியா மாவட்ட புலனாய்வுப்பொறுப்பை ஏற்றிருந்த காலம் நிக்சன் அவர்களின் பணிகளை செவ்வனே செய்வதற்காக வவுனியாவுக்கான புலனாய்வு வேலைகளைஎற்கனவே செய்த அனுபவம் இருந்ததால் பொட்டு அம்மான் அவர்களால் நியுட்டன் அவர்களின் நிர்வாகத்தில் இருந்த என்னை ...
லெப் கேணல் காந்தன் அவர்களுக்கு எமது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் அத்துடன் இன்றைய நாளில் வீர காவியமான அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.